மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டத்தை கண்டித்து டிசம்பர் 1 முதல் சென்னை கோட்டை நோக்கி பிரச்சார பயணம்

பிஆர் பாண்டியன் அறிவிப்பு..

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் இன்று 18 10 2020 அன்று நடைபெற்றது அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையேற்றார்
பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களுக்கு எதிரானது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான இச்சட்டத்தால் இந்தியாவில் வாழக்கூடிய 80 சதவிகித சிறு குறு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறக் கூடிய அவலநிலை ஏற்படும்.

இச்சட்டத்தில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதில் இருந்து அரசு தன்னை விலக்கிக் கொண்டு சந்தையில் போட்டி போட்டு தானே விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்குகிறோம் என்ற பெயரில் ஆன்லைன் கடை அனுமதித்து உலக கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்திய விவசாயிகளை அடகு வைக்கிற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

இச்சட்டமூலம் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இரட்டை கொள்முதல் முறையை கைவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய உணவு கழகம் இனி கொள்முதல் செய்ய இயலாத நிலையை உருவாக்கிவிட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடு வருகிற 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்முதலுக்கான நிதி முற்றிலும் கைவிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் விவசாய உற்பத்தி செலவு பல மடங்கு உயர்வாக உள்ளது. இந்த நிலையில் போட்டி போட்டு உலக சந்தையில் விற்பனை செய்ய இந்திய விவசாயிகளாள் இயலாது.

அதேபோல கார்ப்பரேட்டுகளிடம் ஒப்பந்தம் போடுவது என்பது விவசாயிகள் நலனுக்கு எதிரானது. மத்திய மாநில அரசுகள் தான் விவசாயிகளோடும் வணிகர்களோடும ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது உறுதி செய்வதோடு உரிய சந்தை பாதுகாப்பு வசதியும் கிடைக்கும். அரசு இரட்டைக் கொள்முதல் செய்கிறபோது தான் குறைந்த பட்ச ஆதார விலையில் நம்பகத் தன்மை உருவாகும்.

எனவே மத்திய அரசு சட்டங்களில் இவ்வாறாக மேற்கண்ட திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகிற போது விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் அதைவிட்டு விவசாயிகறைக்கு பலனளிக்கும் சட்டம் என்கிற பெயரில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை செயல்படுத்துவது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்பதை நாங்கள் மத்திய அரசுக்கு கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிரதமர் பிரச்சனையின் நியாயத்தை உணர மறுப்பதும்,மறு பரிசீலனை செய்வதற்கு மருத்து திசை திருப்ப முயற்சிக்கிறார்

குறிப்பாக எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற மாட்டோம் என எங்கள் அரசின் கொள்கை முடிவு என உச்ச நீதிமன்றத்திலேயே எழுத்துபூர்வமாக வாக்குமூலத்தை கொடுத்துவிட்டு தற்போது போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நான் எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை தான் வேளாண் சட்டமாக கொண்டு வந்திருக்கிறேன் என்று உண்மைக்கு புறம்பாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்.இதனை விவசாயிகள் ஏற்கமாட்டோம்.

தொடர்புடையவை:  விவசாயிகள் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது

ஏற்கனவே கிசான் கிரடிட் காடு வழங்கி விவசாயிகளுக்கான சலுகைகளை வழங்குவோம் என்று மூன்றாண்டுகளாக அறிவித்து வந்த மத்திய அரசாங்கம், தற்போது மத்திய மாநில அரசுகளிடம் நிலவுடமை பதிவேடுகளில் இன்றைய நிலைக்கு பதிவேற்றவில்லை என்றும் எத்தனை குடும்பங்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் எத்தனை லட்சம் ஏக்கர் சாகுபடி கொண்டிருக்கிறது என்கிற எந்த ஒரு புள்ளி விவரமும் எங்களிடம் இல்லை என்று கைவிரித்து இருப்பது வெட்கக்கேடானது.

இந்த நிலையில் ஸ்வமிதா என்கிற சொத்து விவரம் குறித்த அறிக்கை காணகார்டு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளை திசை திருப்புகிற காலங்கடத்தும் ஒரு மோசடி நடவடிக்கையாகும். இதனை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்’ விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்த அடிப்படையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கி விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் வெளிவந்திருக்கிறது. இதனை முறை படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தும் அதேவேளையில் கொள்முதலுக்கான சுமைதூக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் கொள்முதல் நிலையம் மட்டுமின்றி தற்காலிகக் இடங்களிலும் லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி இறக்குவதற்கான தொழிலாளர்களுடைய எண்ணிக்கையையும் உடனடியாக உயர்த்த வேண்டும்.அதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் துவங்கிட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.
முன்னதாக மறைந்த சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி பி.குமார் படம் திறக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது

கூட்டத்தில மாநிலத் தலைவர் தா புண்ணியமூர்த்தி தஞ்சை மண்டல தலைவர் என் அண்ணாதுரை தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா ரவி திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன் மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில்குமார் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வைத்தியநாதன் ஒருங்கிணைப்பாளர் வேட்டங்குடி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர் .

இதனை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.

இவன் என் மணிமாறன் செய்தி தொடர்பாளர்

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *