கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை கால தாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் 16 11 2020 காலை 11 மணிக்கு கடலூரில் எஸ் எம் நினைவகத்தில் மாவட்ட தலைவர் ஜி ஆர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில தலைவர் வீ சுப்பிரமணியன் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாவட்ட பொருளாளர் எஸ் தஷிணாமூர்த்தி மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம் மாவட்ட துணை செயலாளர் சரவணன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர் பஞ்சாட்சரம் வெங்கடேசன் தென்னரசு குமரகுருபரன் செல்வகுமார் ராமானுஜம் முருகன் அருளானந்தம் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

கோமுகி அணையில் இருந்து வரும் தண்ணீரை தடுத்து கை கான் வளைவு திட்டம் உருவாக்குவதால் கடலூர் மாவட்டம் மணிமுத்தாறுவரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது இதனால் நல்லூர் விருதாச்சலம் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவே இத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை கால தாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும் அம்பிகா ஆரூரான் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பண பாக்கியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த நான்கு ஆண்டுகளாக பயிர் இன்சூரன்ஸ்யில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்

மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் பொருட்களை பதுக்கி வைத்து விலை ஏற்றும் அத்தியாவசியப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தப்பட்ட நீக்கப்பட்ட பொருட்களை மீண்டும் இணைக்க வேண்டும்

இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 26 27 தேதிகளில் நாடாளுமன்றத்தின் முன்பாக விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளார்கள்

இதனை ஆதரித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளது

கடலூர் மாவட்டத்தில் கடலூர் நடுவீரப்பட்டு பண்ருட்டி குறிஞ்சிப்பாடி விருத்தாசலம் திட்டக்குடி வேப்பூர் திருமுட்டம் காட்டுமன்னார்கோவில் குமராட்சி புவனகிரி கீரப்பாளையம் பரங்கிப்பேட்டை சிதம்பரம் நெய்வேலி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது

கோ மாதவன்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Share this
தொடர்புடையவை:  நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *