மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தவறாமல் நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திருமதி வசந்தா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்
பி.ஆர்.பாண்டியன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போய்விட்டது. ஐப்பசி மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. இதனால் சம்பா தாளடி பயிர்கள் களை எடுத்து உரமிட முடியாத வகையில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகள் மட்டுமே அவ்வப்போது குறைவான மழை பெய்துள்ளது. முழுமையாக மழை பெய்திருந்தால் காவிரி தண்ணீர் பயன்பாடு குறைந்து இருக்கும்.

எனவே தற்போதுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் இறுதி வரையிலும் மேட்டூரில் இருந்து காவிரி தண்ணீர் திறக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே கார்நாடகம் தர வேண்டிய தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் பயிர்கள் கருகும் நிலையிலிருந்து காப்பாற்றும் வகையில் பாசன மேலாண்மையை தீவிர கண்காணிப்புக்கு மாவட்ட ஆட்சியர் உட்படுத்தவேண்டும்.

கூட்டுறவுக் கடன்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை. கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அதற்கான முனைப்பு காட்டாமல் உள்ளனர்,பயிர் காப்பீடு திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பாண்டு கடன் பெறும் விவசாயிகளுக்கும் நவம்பர் இறுதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும்,அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கூட்டுறவுத் துறை முன்வர வேண்டும். குறிப்பாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் தனது வரம்புக்கு உட்பட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மற்றும் பிரசுரங்கள் மூலமாக விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.நவம்பர் இறுதிக்குள்ளாக காப்பீடு செலுத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் எம் செந்தில்குமார்,மாவட்ட தலைவர் எம் சுப்பையன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகஸ்டின், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதனை தங்கள் ஊடகம் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.

இவன் :
என் மணிமாறன் செய்தித்தொடர்பாளர் .

Share this
தொடர்புடையவை:  மக்களின் பேராயுதமாகவும் ஊடகங்கள் விளங்கி வருகிறது: பி.ஆர். பாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *