பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து சற்று முன் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆறு உந்து சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் இதுவரை 41 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், சிஎம்எஸ் 1, விண்ணுக்கு செல்லும் 42வது செயற்கை கோள்களாகும். 1400 கிலோ எடை கொண்டது இந்த சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள். இதன் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகளாகும்.

வானிலை பயன்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட c band அலைக்கற்றை தேவைகளுக்காகவே இந்த சிஎம்எஸ் 1 அனுப்பப்படுகிறது. தகவல் தொடர்புக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்ட நிலையில், அதற்கு மாற்றாகவே சிஎம்எஸ் 1 தற்போது செலுத்தப்பட்டுள்ளது

Share this
தொடர்புடையவை:  "61 நாடுகளுக்கு பரவிய கொரோனா"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *