புத்தம் புதிய பூமி…

புதிய பூமியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியைப் போன்ற இது 185 ஒளி ஆண்டுகள் தொலைவில் மங்கலான சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. கிரகத்தின் அதிகாரப்பூர்வ பெயர் K2-315b. ஆனால் அதன் புனைப்பெயர் “பை எர்த்”. காரணம்:

இது ஒவ்வொரு 3.14 நாட்களுக்கும் அதன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.
K2-315b எவ்வளவு சூடாக இருக்கிறது என்பது வானியலாளர்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அதன் வளிமண்டலம் அல்லது உள் செயல்பாடுகள் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. எனவே விஞ்ஞானிகள் அதன் நட்சத்திரத்தின் சூட்டை வைத்து புதிய பூமியைன் சூட்டை கணித்து கொள்ள முடியும்.

அந்த வகையில் அதன் மேற்பரப்பு வெப்பநிலை 187º செல்சியஸ் (368º பாரன்ஹீட்) இருக்கும். இது தண்ணீரைக் கொதிக்க வைக்க போதுமானதாக இருக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானி பிரஜ்வால் நிருலா குறிப்பிடுகிறார்.

Share this
தொடர்புடையவை:  ஜி7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *