ரேஷன் அட்டைக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

2021 தைப்பொங்கலன்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும், ஜனவரி 4ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Share this
தொடர்புடையவை:  கிராமப்புற மக்களின் உயர்வுக்காக அதிமுக அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து பாடுபடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *