அலங்காநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமாமகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் தவமணி, கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் டிராக்டர் மூலம் அமைதி பேரணி நடத்திய விவசாயிகளை தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட டெல்லி போலீசாரை கண்டித்தும், அதற்கு துணை போன மத்திய அரசை கண்டித்தும், தாக்குதலில் பலியான விவசாயிகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Share this
தொடர்புடையவை:  கமல்ஹாசன் கட்சியின் முதல் தொழிற்சங்கம் பதிவு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *