அத்தனையும் துறந்து
விட்டேன் என்பான்.
அகிலத்தை வெறுத்து
விட்டேன் என்பான்.
உள்ளிருக்கும் கடவுள் தேடி
ஊரூராய் அலைந்திடுவான்
இறைவனை எட்டித் தொட்டிட
அவன்
இல்லறம் விட்டேன் என்பான்.
ஆண்டவனைக் காண, அவன்
ஆசை துறந்தேன் என்பான்.
அவனைக் காணும் எண்ணம்
ஆசையன்றி வேறு என்ன?
விட்டேன் விட்டேன் என்பார்க்கு
விடவில்லை எதையுமேயெனப்
படுவதேயில்லை எந்நாளும்.
பூமியில் கடமை துறந்து விட்டு
சாமியார் வேடம் பூண்டால் மட்டும்
இறைவன் கண்களில் தெரிவானா?
இறையின் அருள்தான் பெறுவானா?
சாமியார் போல் வேடமிட்டு
சத்திரங்கள் கட்டிக் கொண்டு,
சாமியாக இவரே மாறிடுவார்.
இந்த
வீணர் பாதம் தொட்டு வணங்கி,
வீட்டில் சேர்த்த பணமும் கொட்டி,
சாத்திரம் கேட்க அங்கே
பைத்தியக் கூட்டம் ஒன்று
மெய் பணிந்து நிற்கும்
அந்த
பொய் மனிதர் முன்னாலே.
தாடிக்குள் குடியிருக்கும்
கேடித்தனம்,
பாடி நிற்கும் பக்தகோடிக்கு
இப்போ இல்லையின்னா
இது புரிவதெப்போ?
காசு பறிக்கும் பகல்வேடம்
கடவுள் தேடும் பக்தருக்கு,
இப்போ இல்லையின்னா
இது தெரிவதெப்போ?
– ச.தீத்தாரப்பன்
94435 51706
அருமை.. வாழ்த்துகள் கவிஞரே