சசிகலாவுக்கு கொரோனா இல்லை. எனவே ஆஸ்பத்திரியில் இருந்தபடியே விடுதலை ஆகிறார்.
சமீபத்தில் சசிகலா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டாதாக கூறப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போதைய நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுக்குள் உள்ளன எனவும் (அவரது இதய துடிப்பு நிமிடத்திற்கு 74, ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவில் உள்ளது. சுவாசம் நிமிடத்திற்கு 19 என்ற அளவில் இருக்கிறது. அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் 98 என்ற அளவில் உள்ளது சர்க்கரை அளவு 205 ஆக இருக்கிறது. அவருக்கு இன்சூலின் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது). அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது தெரிவிக்கப்பட்டது. அதே போல் இளவரசியின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது.
ஆகவே, சசிகலா திட்டமிட்டப்படி 27 ஆம் தேதி (நாளை) விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.