தன்முனைக் கவிதைகள்

வயலில் நெற்கதிர்கள்/
நிறைந்து வழிந்தன/
நிறையவில்லை வயிறு/
சாலைகளில் உழவர்கள்..


உன்னையே அறிவாய் /
இதுவே தத்துவம்/
சொன்னவரை அறிந்தனர் /
சிறைபிடித்த பின்னர் ..


ஒற்றைச் சிறகு /
வீழ்ந்தது கீழே/
இறகு உண்டு/
கண்டங்கள் தாண்டு ..


கண்ணின் கருவிழி/
நீயே என்றான்/
இருள் சூழ/
தவிக்க விட்டான்..


முகத்தில் பரு/
பதின்ம வயது /
பருத்த உடல்/
நடுத்தர வயது ..


உதிர்ந்தன இலைகள்/
இலையுதிர் காலம்/
உதிரா நினைவுகள்/
இளமைக் காலம் ..


கூதிர் காற்று/
குளிர்ந்தது உடல்/
கூர்மை பார்வை/
அனலாகும் கூட்டம் ..


  • வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி
    வெர்ஜினியா, அமெரிக்கா
Share this
தொடர்புடையவை:  நெருப்பில் பூத்த ஆசிரியர் !

One Comment

  • நீலகண்ட தமிழன்

    கவிதைகள் அருமை
    தொடரட்டும் தங்கள் கவிதைப்பணி நீலகண்ட தமிழன் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *