திண்டுக்கல்லில் பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு செயற்குழு கூட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக .
மாநில துணைத் தலைவர் வணங்காமுடி, மாநில செய்தி தொடர்பாளர் கனிமொழி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு வழங்கும் ஊக்க தொகை ரூ 5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வழக்கறிஞர் சேமநிதி ரூ 10 லட்சமாக உயர்த்த வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் சுவாமி சிலைகளை அமைத்து பொதுமக்கள் வழிபட ஏற்பாடு செய்வது மற்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் மத்திய அரசு சார்பில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர்.


நிகழ்ச்சிகள் வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் பாண்டியராஜன், தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this
தொடர்புடையவை:  தவறான வகையில் விவசாயிகளை மிரட்டுவதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *