தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக குடியரசு தினம்

தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

சென்னை அடையாறில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. 72 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அதேபோல் சென்னை அடையாறில் உள்ள இளைஞர் விடுதியில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் மாநில தலைவர் நாகராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கையாளர்களின் நலன் குறித்து விவாதிக்கப்பட்டது.


இதில், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் மாநில இணை செயலாளர் பேராசிரியர் ராஜா, மாநில செயலாளர் ஷைன் ராஜகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் நடிகை சிந்து, மாநில துணை பொது செயலாளர்கள் சுவன், தியாகராஜன், மாநில துணை தலைவர்கள், அடையாறு சங்கர், குருசாமி, ரவிக்குமார், மாநில அமைப்பாளர் சந்தோஷ்குமார், தின உரிமை ஆசிரியர் கல்பனா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோபிநாத், நடிகர்கள் ஜுபிடர் சதீஷ், சுந்தரபாண்டிய ராஜா மற்றும் செல்வராஜ், பரமேஷ் பத்திரிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Share this
தொடர்புடையவை:  அ.தி.மு.க. எம்.எல்.ஏ., திரு. சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *