தெலுங்கு நடிகை சுவேதா குமாரி போதைப்பொருள் வழக்கில் கைது


இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

போலீசார் விசாரணையில் சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி பின்னர் ஜாமீனில் வந்தார். 
நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தனர். கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைதானார்கள். சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகை சுவேதா குமாரி போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார். 
மும்பை போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது அவர் சிக்கினார். சுவேதாவிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுவேதா குமாரி சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரிங் மாஸ்டர்  என்ற கன்னட படத்திலும் நடித்து இருக்கிறார்.


மும்பை, தானே மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் நடிகைக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த சுவேதா குமாரிக்கு போதைப் பொருள் விற்கும் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  அன்பிற்கினியாள் திரைப்படத்தின் டீசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *