முகம்பார்க்கும் கண்ணாடி
முழுமதியின் முன்னாடி
முனுமுனுக்கும் தன்னழகை
முன்னழகு மேனிமலர்
முடிகூந்தல் கொண்டிருப்பாள்!
அகத்தினிலே உன்னழகை
அழகழகாய் வைத்திட்டேன்
அரவணைப்பில் அத்தனையும்
அன்புடனே அள்ளிடுவேன்
அருகினிலே வென்றிடுவேன்!
நகமும் சதையுமாகி
நமதன்பு பாசமென
நலமுடனே எந்நாளும்
நல்லொழுக்க காதலாக
நயமோடு இணைந்திருப்போம்!
சிகரம் வசிக்கும்
சிங்காரனே சீனிவாசா
சிக்கியுந்தன் உள்ளத்தில்
சிற்றிடையாம் ராதையவள்
சீர்த்தோள்கள் சேர்வீரே!
– சே. பானுரேகா
உதவி பேராசிரியர்,
ஆற்காடு

தொ.பே.எண். 6369086212.
மரபுக் கவிதை சிறப்பு.. வாழ்த்துகள் கவிஞரே
அருமை