ஓங்கியடித்து
இழுத்து வரப்பட்ட
உயிரற்ற உடலை
லாவகமாய்ப் பற்றிக்
கழுத்தில் பற்கள் பதித்துக்
குருதியை உறிஞ்சிக்
கூரிய நகங்களால் கீறி
குடலைக் கிழித்து
முன்னந்தாடியில்
ரத்தம் சொட்ட சொட்ட..
மார் தட்டிக் கொள்ளும்
முதுகு நாணி ஒரு புறம்..
இறுதி வரை பசுந்தளிரைத்
தின்று வயிறு நிரப்பி
உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு
வாழும் மானினம் மறுபுறம்
அடர்ந்த தரு நிறை
காட்டினிலே தினந்தினம்..
இது தான்
இயற்கையின் நியதியோ..?!
சாரதா க. சந்தோஷ்
ஐதராபாத்