கரோனாவின் தோற்றம்: சீனாவுக்கு அப்பாலும் உண்மையை தேடுவோம்…!

ஓராண்டு கடந்தும் ஓயாத பெரும் துயரமாக தொடரும் கரோனா எனும் பேரிடர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனத்திலும் இருக்கிறது. தடுப்பு மருந்து சந்தைக்கு வந்துவிட்டபின்னும், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் உலகம் தத்தளித்துவரும் நிலையில் கரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என ட்ரம்ப் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வந்ததோடு உலக சுகாதார அமைப்பின் ஆராய்சிக் குழு தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த ஆண்டு இறுதியில் சீன அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதையடுத்து கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றடைந்தது.
2019 டிசம்பருக்கு முன்பு வுஹானில் வைரஸ் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வுஹானில்தான் இந்த வைரஸ் தோன்றியது என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்க முடியவில்லை ஆய்வுக் குழு நிபுணர்கள் தெரிவித்தனர்.

வுஹானில் கண்டறியப்படுவதற்கு முன்னர் மற்ற நாடுகளில் வைரஸ் தோன்றி இருக்கலாம் என்பதற்கான ஐயத்தை வலுப்படுத்தும் சான்றாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அறிக்கை உள்ளது.


மேலும் வைரஸஸ் எந்த விலங்கில் இருந்து வந்தது என்பதற்கான ஆதாரம் உறுதிபடுத்தப்படவில்லை. வைரஸின் தோற்றம் மிகவும் சிக்கலானது வைரஸ் தோற்றம் குறித்து முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். முதலில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட இடத்தை மட்டும் கள ஆய்வு செய்து வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவது அப்பாவித்தனமானதாக இருக்கும். எனவே மற்ற நாடுகளிலும் கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார்.


இதையடுத்து இத்தாலி மற்றும் ஸ்பெயினிலும் கள ஆய்வுகள் நடத்தப்படலாம் என தெரிகிறது. சீனாவில் தொற்று அடையாளம் காணப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில், நோய்த்தொற்றுகள் இருந்தன என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு என்பது அறிவியல் தொடர்பானது. எனவே உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவுக்கு உயர் மட்ட ஒத்துழைப்பை சீனா வழங்கியுள்ளதுடன், அதன் கள ஆய்வுக்கு தன்னால் முடிந்த அளவில் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


சீனத் தரப்பினருடன் நிபுணர்கள் குழுவினர் பல்வேறு விவாதங்களை மேற்கொண்டனர் மேலும் மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் வுஹான் சி.டி.சி. இந்த குழு வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, ஹுவாஷோங் வேளாண் பல்கலைக்கழக நிபுணர்களுடன் பேசினார்.

தொடர்புடையவை:  நாளை 9 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை மிதக்குமா?


வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் இருந்து தற்செயலாக வைரஸ் கசிந்திருக்கக்கூடும் என்று கருதுவதால், அங்கும் ஆயுவு மேற்கொள்ளப்பட்ட்து. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


விஞ்ஞான ஆய்வின் ஒரு பணியாக, ஆய்வுக் குழுவினர்களின் கூடுதல் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது சீனாவின் கடமையாகும். வைராலஜிஸ்ட்டும், உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு உறுப்பினருமான மரியன் கூப்மன்ஸ் கூறியது போல “எங்கிருந்தாலும் ஆதாரங்களைத் தேடுவோம். அறிவியலின் ஆதாரமே உண்மையின் வெளிப்பாடாகும்.

  • திருமலை சோமு
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *