காதல் செய்வோம் வாரீர்!!!


காதல்! காதல்! காதல்!
காதல் இல்லையேல்-
சாதல்! சாதல்! சாதல்!
கம்பன் காலக் காதல்!

காதல்! காதல்! காதல்!
காதல் போயின்-
இன்னொரு காதல்!
மற்றொரு காதல்!
தொடரும் காதல்!
கலியுகக் காதல்!

செம்புலப் பெயல் நீர்!
சங்க காலக் காதல்!

கையில் காசு!
கடற்கரை ! பூங்கா!
நவீன நடைமுறைக்
காதல்!

தோற்ற காதல்!
ஜெயித்த காதல்!
என்றும் உண்டு!

இருவர் காதல் மட்டும்
காதல் அல்ல!

என்மேல் காதல்-
ஒருமை!
உன்மேல் காதல்!
இருமை?
நம்மேல் காதல்!
பண்மை!

கடவுள்- மனிதன்
உயர்திணைக் காதல்!
மற்றவை காதல்!
அஃறிணைக் காதல்!

காதல்! காதல்! காதல்!
காதல் செய்வோம்!
உண்மைக் காதல் வாழ்க!!!

சிவசுப்பிரமணியன் குருமூர்த்தி

மடிப்பாக்கம், சென்னை 600 091
கைபேசி:9367108827
மின்னஞ்சல்: gsivasubramanian61@gmail.com

Share this
தொடர்புடையவை:  புக்கு மட்டும் வேணும் சாமி

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *