சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 க்கு விற்பனை

திண்டுக்கல்
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே வெங்காய சந்தை செயல்படுகிறது இந்த சந்தைக்கு ஒட்டன்சத்திரம், பழனி, ரெட்டியார்சத்திரம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் திண்டுக்கல்லில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம் தண்ணீரில் மூழ்கியது.

மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வெங்காயம் அழுகி நாசமானது. இதனால் சின்ன வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது தினமும் 500 டன் வரத்து காணப்பட சின்ன வெங்காயம் தற்போது 100 டன் மட்டுமே சந்தைக்கு வருகிறது.அதுவும் மைசூர், ராசிபுரம் பகுதிகளில் இருந்து மட்டுமே சின்னவெங்காயம் வருகின்றது.

ஆனால் வழக்கமான ஊர்களிலிருந்து மிகவும் குறைந்த அளவே வருகின்றது. இதன் காரணமாக கடந்த மாதத்தின் இறுதியில் இருந்தே விலை உயர்ந்து வருகிறது. இதற்கிடையே டீசல் விலை கடுமையாக உயர்ந்தது இதன் எதிரொலியாக வாடகை கட்டணம் அதிகரித்துவிட்டது.

இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது அதன்படி கடந்த வாரம் கிலோ ரூபாய் 80 முதல் 120 வரை விற்பனையான சின்னவெங்காயம் நேற்று ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனை ஆனது. மேலும் பல்லாரி வெங்காயத்தை பொறுத்தவரை கடந்த வாரம் ரூபாய் 35 க்கு விற்பனையானது.

தற்போது ரூபாய் 55 விற்பனையாகிறது இந்த நிலை நீடித்தால் வெங்காய விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர் .

Share this
தொடர்புடையவை:  "இது விபத்து" பகுதி " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *