ஊருக்கு உலகுக்கு தம் உரைதன்னை
உரக்கத்தான் உரைத்திடுவார்அக உறைவிடத்தில்
எல்லோர்க்கும் பொதுவாக இருந்திடுவார்
ஏற்புடைய ஏற்றத்தைநாம் ஏதும் வரை!
சத்தியத்தின் விழிதனிலே வாழ்ந்து காட்டி
சமத்துவத்தை சட்டையாய் தாமுள்ளவரை!
நம் ஊணினிலே ஊட்டிடுவார் உள்ளமட்டும்
நேர்த்தியாய் நெறிதவறா நிதானத்துடன்!
தத்துவத்தை தன்மையாய் தரணியிலே
புத்தகமாய் புனைந்திடுவார் புரிதலுடன்!
வித்தகனாய் நாம்விரிவடைந்து ஞானமெய்த
விசைப்படகாய் விழைத்திடுவார்நாம் விழித்திடவே!
அப்பனாய்! அம்மையாய்! பள்ளிநேரமெல்லாம்
அரியபல அறிவினைநாம் அடையவேண்டி
விஞ்ஞானத்தை விரிவாக்கஞ்செய்துநம் கல்விமூலம்
விரிவுரையை வினவியே விதைத்திடுவார்!
நாளமெங்கும் நம்முள்ளே அஞ்ஞானமகல
நமற்கேற்ப நவின்றிடுவோர் நாளுமெல்லாம்!
கதிரவன்போல் கனலேற்றி நாமொளிபெறவே
காலமெல்லாம் தம்கல்வி கொண்டு கசிந்தனாரோ!
நரையுதித்து உடல்சோர்ந்து முதுமையுடன்
நாடிவாடி நரம்படங்கி நலிந்தனரோ!
குவலயத்தில் நம்குலமேவ குறுந்தொகையாய்
குலைந்திட்டோர் குறுங்கனலாய் குகைதனிலே!
பார்திட்டு நம்மிடையே வேண்டாமெனில்
பார்த்துவிட்டு போகாமல் பக்தியுடன்!
மேல்வார்தம் மேன்மையை மேன்மேலும்!
மேவுதலின் முறைதனையே முனைப்பதுவாம்!
அகிலமெல்லாம் ஆர்ப்பரிக்க அந்நாளில்
அரசியலில் அற்புதமாய் ஆட்சிதனை!
அவணியெங்கும் அர்ப்பணிப்பாய்தம் அறப்பணியை
அளித்திட்ட அண்ணாவும் ஓர் ஆசானே!
வெறும் சொற்களை வைத்து தான் மெருகேற்றி!
வெற்றிடத்தில் நின்றுதானென்ன பயன்!
நல்லதொரு நிலையில் நாமிருக்க
நாளுமெல்லாம் பாடுபட்டநம் மாசானுக்கோ!
நாமாற்றும் தொண்டு குருந்தொண்டு
நலிவுற்ற அவர்கட்கு விளம்பரமுண்டோ!
மனமேறும் நம்பேச்சு மருந்தளவே!
மாட்சியைச் சேர்க்காது மனதளவே!
காலத்தின் கையினிலேஅவர் வாழுமட்டும்!
கருத்துடனே உதவிடுவோம் கணப்பொழுதும்!
நம்பொருளை அவர்க்களித்து இன்புறவே!
நாமகிழ்ந்து அவர்வாழ நன்மையுடன்
ஏதுவாய் எண்ணமேதும் ஏற்றிவிட்டு!
ஏற்றிடலுக்கேற்ற பொருளை ஏவலாக
அவர்வாழ நாம்காண அரிதோ அரிது!
அதுவே அவர்கட்கு அரியதோர் விருது!
பேராசிரியர். முனைவர். இரா. கணேசன்
தலைவர்
தேசிய தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவனம்
கோயம்புத்தூர், தமிழ்நாடு
மின்னஞ்சல்: chairmannfed@gmail.com
ஆகச்சிறந்த வரிகள்.. உங்கள் கவிதையை புதிய திசைகள் இணைய தளம் வெளியிடுவதில் மகிழ்கிறது.. வாழ்த்துகள்
சிறப்பு. நல்வாழ்த்துகள்!