அருள்நிதியின் அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரம், குற்றம் 23 திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன், இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி.

அஜய் ஞானமுத்துவின் முதல் திரைப்படமான ‘டிமாண்டி காலணி’ யில் நடித்ததை போலவே, அவரின் உதவி இயக்குநர் இன்னிசை பாண்டியனின் முதல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் அருள்நிதி.

அருள்நிதி நடிக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அருள்நிதியின் கெட்டப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  மிகவும் ஒழுக்கமான நடிகை அவர்: ஆர்.ஜே பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *