அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,

நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல், தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து வந்த காரணத்தினால் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  கமலின் அறிவிப்பால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *