கவிதை படைத்தல் கலை…

மூன்றெழுத்து மூச்சு;
மரணந்தாண்டும் வீச்சு…
மண்ணில் விதைத்து
விண்ணில் விளையும்
நட்சத்திரங்கள்…
மழலையின் சிணுங்கல் ;
சிறுவரின் வியப்பு ;
இளையோரின் காதல் ;
நடுவரின் புரட்சி ;
முதியோர்க்கோ கண்ணாடி…
சில பிச்சைகள் ;
சில இச்சைகள் ;
சில எச்சைகள் ;
ஆனாலும்
தேவைகள்…
சிலருக்கே கைவரும் ;
பலருக்கு பொய்வரும் ;
படிப்பவர்க்கோ புகைவரும் ;
என்பதான
விரவுகள்…
சொர்க்கத்தின் தண்டனைகள் ;
நரகத்தின் மன்னிப்புகள் ;
ஆம்
இவ்வுலக யதார்த்தங்கள் ;
அவ்வுலக நியாயத்தீர்ப்புகள் ;
மொத்தத்தில்
தராசுக்கள்…
ஆக
கவிதை படைத்தல்
கலை…
நானொன்றும் கவிஞனில்லை,
ஆனாலும் சமைத்திருக்கிறேன்…
கண்கள் விரிய
விருப்பமிடுங்கள்….
இதயம் தொட்டால்
பின்னூட்டமிடுங்கள்…
உயிரில் உறைக்க
பகிருங்கள்…
தவறென்றால
தட்டுங்கள்…
திமிரென்றால்
குட்டுங்கள்…
ஏதேனும்….

ராஜூஆரோக்கியசாமி

Share this
தொடர்புடையவை:  நானும்,
என் விதைகளும்..!!

One Comment

  • Saradha Santosh

    வித்தியாசமான வரிகள்.. வாழ்த்துகள் கவிஞரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *