சிந்தனைத் துளிகள்..

** யாரிடம் சொல்லப்போகிறது
காதலை…?
“தடக் தடக்” என்று…
புகைவண்டி!

**உதைப் பந்தாகிறாள்
குடும்பங்களில்
தலைவி!

**இரு தாய்கள் நமக்கு…
மூத்தத் தமிழ்!
ஈன்றத் தாய்!

**காலமே கைதியாக்கியது…
பெருந் தொற்றால்
வீட்டில் இருந்தபடி பணி!

**ஆன்மாவை
அழகாக்குவது
புன்னகை!

** கனவும்,
அதன் மீது கவனமும்
வேண்டும் வெற்றிக்கு!

**வேண்டுமோ, வேண்டாமோ..
நிறைந்துவிடுகிறது
குப்பைத்தொட்டியின் வயிறு!

**பெண்ணின் நியாயத் தேவைகளைப்
பேசும் ஆணினால்
பெண்மை உயரும்!

**ஆடையைக்
குறைக்கும்போதே
பண்பாடு…
குழிக்குள் போகும்!

**ஊசலாடும்
மனிதத்தின்
உயிர் காக்க
அன்பு செய்வோம்!

மாலதி இராமலிங்கம்,
புதுச்சேரி.

Share this
தொடர்புடையவை:  சூழல் - வெற்றி

One Comment

  • Saradha Santosh

    சிந்திக்க வைக்கும் சிந்தனைத் துளிகள்.. வாழ்த்துகள் கவிஞரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *