சீனாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டம் ஐரோப்பாவிற்கு வாய்ப்புகளை வழங்குகிறது: நிபுணர் கருத்து

பெய்ஜிங்

சீனாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டம் உள்நாட்டில் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஐரோப்பிய முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று ஜெர்மனி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


சீனாவின் 14 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2021-2025) வருடாந்திர பொருளாதார வளர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதன் மூலம், நிலையான வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிராங்பேர்ட் ஸ்கூல் ஆஃப் ஃபைனான்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்டின் பொருளாதார பேராசிரியரும் சீன-ஜெர்மன் மையத்தின் தலைவருமான ஹார்ஸ்ட் லோச்செல் சமீபத்திய பேட்டியில் கூறினார்.


உள்நாட்டு சந்தையை பிரதானமாகக் கொண்டுள்ள “இரட்டை சுழற்சி” உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை வலுவூட்டுகின்ற புதிய வளர்ச்சிக்கான முன்னுதாரணமாகும். உயர் தொழில்நுட்பத்தின் மீதான நுகர்வு மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்க சீனா விரும்புகிறது என்பதைக் இது காட்டுகிறது என்று லோச்செல் கூறினார். “இரட்டை சுழற்சி” வியூகத்தை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் உயர்தர வளர்ச்சியை எப்படி அடைவது என்பதை தேசிய மக்கள் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய ஐந்தாண்டுத் திட்டம் தெளிவுபடுத்துகிறது.


உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடான சீனா அடிப்படை மாற்றங்களை செய்து வருவதால், 2021 ஆம் ஆண்டில் 6 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளது.


இந்த திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள புதுமைகளால் இயக்கப்படும் வளர்ச்சியை சீனா மேற்கொள்வது “முற்றிலும் சரியானது” ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் சீனாவில் வர்த்தகம் செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் எளிதில் கணிக்க முடியும். அதோடு ஐரோப்பாவும் சீனாவும் உயர்தர நுகர்வு, தொழில்நுட்பம் மற்றும் பசுமை பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
எடுத்துக்காட்டாக, பல வெளிநாட்டு நிறுவனங்களின் உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகள் “மிகவும் வலுவானவை. தவிர, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் சீனா ஏற்கனவே முன்னேறியுள்ளது.

ஐரோப்பிய, ஜெர்மன் நிறுவனங்கள் இத்துறைகளில் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டால் அவற்றுக்கும் சில நன்மைகள் உள்ளன.”
பசுமை நிதி, நிலையான வளர்ச்சி மற்றும் மாசு இல்லாத உற்பத்தி ஆகியவற்றில் சீனாவுடன் ஐரோப்பா ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான பெரிய வாய்ப்பாக இது அமையும். ஏனெனில் இரு தரப்பினரும் பசுமை பொருளாதாரத்தில் “மிகவும் வலுவான கூட்டு ஆர்வத்தை” கொண்டுள்ளனர்.

மாசுபாடு ஒரு தேசிய பிரச்சினை அல்ல, இது ஒரு உலகளாவிய பிரச்சினை ஆகும்.
சீனாவின் “இரட்டை சுழற்சி” வியூகம் “மிக நல்ல பலன்களை அளிக்கும் என்பதால், சீனா-ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து தான் நம்பிக்கை இருப்பதாக லோச்செல் கூறினார்.

தொடர்புடையவை:  நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்


சீன சந்தையில் உள்ள வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் என்று அவர் கூறினார். ஜெர்மன் தொழில் நிறுவனங்கள், ஜெர்மன் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் சீனாவுடன் இணைந்து வர்த்தகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.


சீனாவுடனான வர்த்தகத்தால் ஜனவரி மாதத்தில் ஜெர்மன் ஏற்றுமதி வியக்கத்தக்க வகையில் இருந்தது. சீனாவுடன் எங்களுக்கு வலுவான வர்த்தகம் இருந்ததால் ஜெர்மனியின் பொருளாதார மீட்பு வலுவாக இருந்தது. ஏனெனில் ஜெர்மன் ஏற்றுமதியை அதிகம் நம்பியுள்ளது. சீனா வலுவான வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்று நிபுணர் ஒருவர் கூறினார்.

  • திருமலை சோமு
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *