தண்ணீர் தண்ணீர்

தன்னிகர் இல்லாத் தான்தோன்றி தண்ணீர்!
தனக்குவமை இல்லா பொருளும் தண்ணீர்!
தேவரும் முனிவரும் மன்னரும் மனிதரும் இன்னபிற உயிரும் இயற்கை அன்னையும்
இயல்பாய் இருக்க
வேண்டுவது தண்ணீர்!

காட்டில் மேட்டில் மலையின் முகட்டில்
எங்கும் என்றும் இருப்பது தண்ணீர்!
கையால் அள்ளி முகர்ந்து குடித்த
நாட்கள் இன்று கடந்தே விட்டது!
புட்டியில் அடைத்து விலையும் சொல்லி
கடையில் விற்கும்
காலம் வந்தது!

கண்ணில் கசியும் திரவம் கண்ணீர்!
சோற்றின் சுவைக்கு வேண்டும் உமிழ்நீர் !
உடலின் ஓட்டம் நிலைக்க செந்நீர்!
கழிவுகள் போக்கிடும் வழியே சிறுநீர்!

காதல் முத்தம் கலப்பதில் தண்ணீர்!
தாரை வார்க்கத் தருவதும் தண்ணீர்!
மோரும் பீரும் முக்கால் தண்ணீர்!
உலக இயக்கம் எங்கும் தண்ணீர்!

சண்டைகள் ஆயிரம் தண்ணீர் வேண்டி
உலகில் நடப்பது நாமே அறிவோம்!
சரியான பங்கை உரிமை கொள்வோம்!
சலனம் இன்றி பிரித்தே ஏற்போம்!

மழையின் கொடையை என்றும் சேர்ப்போம்!
நீர்நிலை எல்லாம் சரியாய் காப்போம்!
உபரியாய் நீரை உயர்திட வேண்டி
உண்மை உழைப்பும்
உறுதியும் கொடுப்போம்!!!!!

சிவசுப்பிரமணியன்_குருமூர்த்தி

மடிப்பாக்கம் சென்னை 600 091
கைப்பேசி: 9367108827
மின்னஞ்சல்: gsivasubramanian61@gmail.com

Share this
தொடர்புடையவை:  நானும் ஆவேன்

One Comment

  • Saradha Santosh

    நீரின் இன்றியமையாமையை விளக்கும் அற்புதக் கவிதை.. வாழ்த்துகள் கவிஞரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *