தன்முனைக் கவிதைகள்

ஆயிரம் எண்ணங்களை/
வரிசை அமைத்து/
மனதில் அசைபோட்டு/
எழுதுவது கவிதை…


மாடு தின்றதை/
அசை போடும்/
வேகமாய் ஓடும்/
வாழ்க்கையும் அவ்வாறே..


நள்ளிரவு பாட்டு/
தூக்கம் கலைத்தது/
எதிர்பாரா துன்பம்/
வாழ்தல் கலைக்கும்….


மூங்கில் துளை/
புகும் காற்று/
மயக்கும் இசையாம்/
துளிர்க்கும் உயிராம்..


நீந்துதல் தொழில்/
மூச்சும் பிறருக்காய்/
குழம்பில் மணம்/
மீனின் வாழ்க்கை….


நட்சத்திரம் மின்னியது/
தண்ணீர்க் குடத்திற்குள்/
நட்சத்திரங்கள் காணவில்லை/
மழை பொய்த்ததால்…


இடைவிடா ஓசை/
துள்ளிடும் பொழுதில்/
வாழ்வு இனிதாகும்/
கடலின் பதிப்பாகும்..


தூறல் தூறியது/
செவ்வானம் மணந்தது/
உதயமானது சூரியன்/
காலைப் பொழுது..


கண் திறந்தாள்/
உதிக்கும் பொழுதில்/
வசை மொழியால்/
துளிர்த்தல் கருகியது..


தினம் தினம்/
யோசித்துச் செய்தல்/
அலுப்புக் கூட்டும்/
கூட்டும் பொரியலும்…


வழக்கறிஞர்
ம. வீ..கனிமொழி
வர்ஜீனியா.. அமெரிக்கா..

Share this
தொடர்புடையவை:  காதல் !

One Comment

  • Saradha Santosh

    தன்முனைக் கவிதைகள் அனைத்தும் சிறப்பு.. வாழ்த்துகள் கவிஞரே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *