திமுக தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்

அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும்

ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும்

சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும்

வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்படும்

பெண்களுக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்

இந்து கோயில்களின் குடமுழுக்குக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கப்படும்

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்

சிறுகுறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமாக வழங்கப்படும்

தமிழக சட்டமன்றத்தில் சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும்

500 இடங்களில் கலைஞர் உணவகம் கொண்டுவரப்படும்

30 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்கடன்களை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும்

தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்களில் 75% தமிழருக்கு வேலை வழங்க சட்டம் இயற்றப்படும்

போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்

வேளாண்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்

இந்து கோயில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும்

திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்

வேலூர், ஒசூர், கரூர், ராமநாதபுரத்தில் புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்

கூட்டுறவு வங்கியில் 5 பவுன் உட்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும்

100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்

அரசு உள்ளுர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கண்ட ஆர்ப்பாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *