“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி”

தமிழின் மூத்த பத்திரிகையாளர்களில் முக்கியமானவரான திரு. கோசல்ராம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தினபூமி, தினகரன், தமிழ் முரசு, விகடன் போன்ற நாளிதழ்களிலும், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களிலும் முக்கிய பணியாற்றிய அவர் “நம்ம அடையாளம்” என்ற பத்திரிகையையும் தொடங்கி சிறப்பாக நடத்தியவர். புலனாய்வு இதழியலில் சிறந்து விளங்கினார். இறுதியாக நியூஸ்7 செய்தி தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இதயநோயால் அவதிப்பட்டு வந்த அவர், 49 வயதில் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this
தொடர்புடையவை:  "இது விபத்து" பகுதி " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *