சித்ரா பௌர்ணமி உற்சவம்

சித்ரா பௌர்ணமி உற்சவம்
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள்
பச்சைப்பட்டுடுத்தி தெப்பத்தில் இறங்கினார்

திண்டுக்கல், ஏப்.28- திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில். இங்கு வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்த பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தாண்டு கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து பௌர்ணமி உற்சம் பக்தர்களின்றி நடத்தப்பட்டது.
அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைப்படி நேற்று சித்ரா பவுர்ணமி உற்சவம் நடைபெற்றது. பச்சைப்பட்டுடுத்தி பெருமாள், குதிரையில் பவனி வந்து கோயில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில் இறங்கினார். பக்தர்களின்றி, கோயில் சேவார்த்திகள் மட்டும் கலந்து கொண்டனர். முன்னதாக சன்னதியில், வேதபாராயனம், மந்திரங்கள் முழுங்கப்பட்டது. பச்சைப்பட்டுடுத்தி பெருமாள் தெப்பத்தில் இறங்கியது, மழைவளம், மக்கள் சுபிட்ஷம் அடைவர்கள் என்பது ஐதீகம்.

அதேபோல், திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில், சித்திரை பௌர்ணமி உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் பச்சைப்பட்டுடுத்தி ஏகாந்தம் அலங்காரத்தில் விற்றிருந்தார்.

Share this
தொடர்புடையவை:  கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *