திண்டுக்கல் ரயில் நிலையத்தில்
தேஜஸ் ரயிலுக்கு மலர் தூவி
உற்சாக வரவேற்பு

திண்டுக்கல்,ஏப்.3-. சென்னை – மதுரை இடையே பகல் நேர தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்தடைகிறது. பின்னர் மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னையை சென்றடையும். இந்த ரயில்
கொடைரோடு, திருச்சியில் மட்டும் நின்று செல்லும் வகையில் இருந்தது. சென்னைக்கு 6.30 மணி நேரத்தில் பயணிகள் சென்றனர்.
திண்டுக்கல் வர்த்தகர்கள், பொதுமக்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை விடுத்ததை அடுத்து ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து திண்டுக்கல்லில் நின்று செல்லும் என்று ரயில் நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி சென்னையிலிருந்து – மதுரை சென்ற தேஜஸ் ரயில் நேற்று காலை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்ற தேஜஸ் ரயிலுக்கு மேளதாளம் முழங்க, மலர்தூவி பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் வரவேற்பு அளித்தனர். காலை 11 மணியளவில் வந்த தேஜஸ், 2 நிமிடம் நின்று சென்றது. சென்னையிலிருந்து திண்டுக்கலுக்கு 5 மணி நேரத்தில் பயணிகள் வந்து சேர்ந்தனர்.

பின்னர் மதுரையில் இருந்து மதியம் 3.45 க்கு திண்டுக்கல் வந்து 2 நிமிடம் நின்று சென்றது. குறைந்தபட்ச கட்டணமாக திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு ரூ 840 வசூலிக்கப்படுகிறது.
முன்னதாக திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத்தினர் ரயில் இன்ஜின் ஓட்டுனருக்கு இனிப்பு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

Share this
தொடர்புடையவை:  சனிப்பெயர்ச்சி தேதி குறித்து பக்தர்களிடையே ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *