பாரதப்பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள் விடுத்து மெயில் அனுப்பியுள்ளார்.
” என் அரசியல் வழிகாட்டியும்,நம் பரதப்பிரதமர் 
திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு
என் வணக்கம்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக நீங்கள் எடுக்கும் அனைத்து செயல்களுக்கும்
என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .என்னுடைய வேண்டுகோளை பரிசீலித்து உடனடியாக
ஆவன செய்ய வேண்டுகின்றேன் .அரசு இலவசமாக அரசு மருத்துவமனைகளிலும்,சுகாதார மையங்களிலும் இலவசமாக தடுப்பூசி இரண்டு
டோஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம் மருத்துவ காப்பீட்டு பாலிசிதாரர்கள் /மருத்துவகுடும்ப காப்பீட்டு அட்டை
வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டின் கீழ் தனியார் மருத்துவ மனைகளில் தடுப்பூசி போடஉடனடியாக ஆவன செய்ய வேண்டும். இதை அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் காப்பீட்டு சேவைக்குள்
இந்த தடுப்பூசி செலவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். இந்த மோசமான நோய் தொற்று காலத்தில்நான்கு பேர்  கொண்ட ஒரு குடும்பத்திற்கு தடுப்பூசிக்கு சுமார்  3000 ரூபாய் என்பது மிக அதிகமான செலவாகும். நம் இந்தியாவில் மக்கள் அனைவருக்கும்
மிக குறுகிய காலத்தில் கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ள என் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றுவீர்கள் என்ற
நம்பிக்கையுடன் இக் கடித்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.இரண்டு நாட்கள் முன்தான் நானும் என் குடும்பத்தாரும் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டோம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல்
மிக நலமாக இருக்கின்றோம்.கொரோனவை நம் இந்தியாவிலிலிருந்து ஒழிக்க தாங்கள் எடுக்கும் அனைத்து செயல்களுக்கும் ,கடவுள் தங்களுக்கு சிறந்த தேக ஆரோக்கியத்தையும்
மனோ  உறுதியையும் தர ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.”
என்றும் அன்புடன்
எஸ் வி சேகர்


தகவல்…..மாலதி சந்திரசேகரன். 

Share this
தொடர்புடையவை:  முதலமைச்சர் பொய்களையும் அவதூறுகளையும் சொல்லிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்: மு.க.ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *