வைரஸ் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்!

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடர்ந்து 24 மணி நேரத்தில் 350,000 க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் அதே நாளில் 2,800 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். வைரஸால் நாட்டில் திரட்டப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 17.3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.


நோய்த்தொற்றுகள் அதிகரிப்பது நாட்டின் சுகாதார அமைப்பின் சீர்கேட்டை குறிப்பதாக உள்ளது. மருத்துவ வளங்கள் பற்றாகுறை, ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகள் இல்லாததால், பெருமளவில் நோயாளிகள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


கடந்த சில மாதங்களில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்தியதால் இதுபோன்ற பயங்கரமான ஒரு சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. உள்நாட்டு பயணத்தின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்தியது, பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளபடாமல் விட்டது, முககவசம் அணியாமல் அல்லது சமூக இடைவெளி விதிகளை கடைபிடிக்காமல் மக்கள் கலாச்சார, மத மற்றும் அரசியல் நிகழ்வுகளில் கல்ந்து கொண்டது போன்ற காரணங்களால் பெருந்தொற்று பேரிடரை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமலாமல் வைரஸ் இந்திய திரிபு உருவாக காரணமாகவும் அமைந்துவிட்டது. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் மக்கள்தொகையுடன் ஒப்பீடுகையில் குறைவாகவே உள்ளது, இருப்பினும் உலகளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டர்வர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் சீனாவையடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. எதிர்காலத்தில் வைரஸ் எவ்வாறு உருமாறும், தற்பொது உள்ள தடுப்பூசிகள் அந்த புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக செயல்படுமா என்பது பற்றி எதுவும் கூற முடியாத சூழலில் சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்களே வைரஸ் கட்டுப்பாட்டுக்கான ஒரே வழியாக உள்ளது.
வைரஸ் பரவுவலை கட்டுப்படுத்தி மக்களை காக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகம் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பொது சுகாதார நடவடிக்கைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.


தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு இந்தியாவுக்கு உதவுவது பங்களிப்பு செய்கிறது. இந்த வாரம் சீனா சுமார் 10,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவி கரம் நீட்ட தயாராக இருப்பதாக கூறியுள்ளன.


தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்துவதன் மூலம் மீண்டும் தீவிர வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதை இந்தியாவின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டு உலகின் பிற நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொடர்புடையவை:  தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் பணிகள்!


சீனாவைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக புதிய பாதிப்புகளில் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியதன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. எனினும் கடுமையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. மே தின விடுமுறை என்பது கொண்டாட்ட நாளாக இருப்பதால் அப்போது பலர் பயணம் செய்வார்கள். வைரஸை வென்று சுகாதார பேரிடிரில் இருந்து உலகம் மீண்டு வர வேண்டுமானால் மக்கள் பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். தாமதமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவற்றை தவிர வேறு வழியேதுமில்லை。

  • திருமலை சோமு
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *