உலகம் சிரிக்கிறது!

யாகம் வளர்த்தால்
நோய் தீரும் என்றான்
ஒருவன்…!

கிரகம் விலகினால்
நோய் அகலும் என்றான்
இன்னொருவன்

நோயும் இல்லை பேயும் இல்லை எல்லாம் பொய்யென பிதற்றித் திரிகிறான் வேறொருவன்…!

தடுப்பூசி போட்டால்
சாவு வரும்
கோமியம் குடித்தால்
கொரோனா அழியும்
என்கின்றனர் சில உள்ளூர் விஞ்ஞானிகள்…!

தொற்தென தொற்றி
பற்றென பற்றி..
மானுடனின் மரணக் கணக்கை சத்தமே இல்லாமல்
வரவு வைத்து கொண்டிருக்கிறது
இந்த மெளன வைரஸ்!

தேசத்தின் மரண ஓலத்தை மிஞ்சும் உன் கோஷங்களை கேட்டு உலகம் சிரிக்கிறது!

 • திருமலை சோமு
Share this
தொடர்புடையவை:  ஆணவம் !

2 Comments

 • G Santhana Gopala Krishnan

  ஏதாயினும், தர்ம நெறி
  என்று ஒன்று உண்டு.

  முன்னோர் கண்டு, வழி
  கொண்டு நடத்திக் காட்டிய நெறி.

  இடர் நேரிடினும் தர்மம் பிறழா
  வாழ்க்கை வையத்துள் நன்மை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *