கோவிட்-19 தொற்றுநோயை சமாளிப்பதில் வளரும் நாடுகளுக்கு உதவ சீனா புதிய உறுதிமொழி!


கோவிட்-19 தொற்றுநோயை சமாளிப்பதில் வளரும் நாடுகளுக்கு உதவ சீனா பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், குறிப்பாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் மதிப்பில் நிதியுதவி மற்றும் மேலகதிக தடுப்பூசிகளை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையமும் இத்தாலியும் இணைந்து நடத்திய உலக சுகாதார உச்சி மாநாட்டில் காணொலி மூலம் கலந்து கொண்ட சீன அதிபர் ஷிச்சின்பிங் கூறுகையில் நூற்றாண்டு காணாத மிக மோசமான தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் குறைபாடுகளை சரிசெய்யவும், பலவீனமான இணைப்புகளை வலுப்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்தினார்.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 165 மில்லியனைத் தாண்டியுள்ளது, 3.4 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தடுப்பூசிகளை உலகளாவிய பொது பொருளாக அறிவிக்க வேண்டும் ஷிச்சின்பிங் என்று முன்மொழிந்தார். ஆனால் தற்போது தடுப்பூசிகளின் சீரற்ற பிரச்சனை இன்னும் தீவிரமாகியுள்ளது.
உலகளவில் உள்ள 1.1 பில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை உயர் மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் நிர்வகிக்கப்படுகின்றன, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 0.3 சதவிகித தடுப்பூசிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குநர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.

சீனா 300 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கியுள்ளது; இது 80 க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளின் அவசர தேவைக்கு நன்கொடையாகவும் மேலும் 43 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. மற்ற வளரும் நாடுகளுடன் கூட்டு உற்பத்தியை மேற்கொள்ள சீனா முயன்று வருகிறது.

உலகெங்கிலும் நியாயமான மற்றும் சமமான முறையிலான தடுப்பூசி விநியோகத்தை ஊக்குவிப்பதற்காக தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த சர்வதேச மன்றத்தை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்ததோடு நோய்த்தடுப்பு இடைவெளியை குறைக்க நாங்கள் பாடுபடுவதால், நேர்மை மற்றும் சமத்துவத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும்” என்று ஷி வலியுறுத்தினார்.


கோவிட்-19 நோய் தடுப்ப்பு பணியில் வளரும் நாடுகளுக்கு உதவ சீனா ஏற்கனவே 2 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் 13 சர்வதேச அமைப்புகளுக்கும் மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது, இது 280 பில்லியனுக்கும் அதிகமான முககவசம், 3.4 பில்லியன் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் நான்கு பில்லியன் சோதனை கருவிகள் ஆகியவற்றை சீனா உலகிற்கு வழங்கியுள்ளது என்று ஷி கூறினார்.


மேலும் ஏழை நாடுகளுக்கான ஜி 20 கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் இடைநிறுத்த திட்டத்தை சீனா முழுமையாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது ஜி 20 உறுப்பினர்களிடையே அதிகபட்ச சலுகையாகும். ஜி 20 நாடுகளின் உறுப்பினர்கள் வளரும் நாடுகளுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் அளித்துள்ள இடைநிறுத்த சலுகை மற்றும் மேம்பாட்டு உதவி போன்ற வழிகளில் தொடர்ந்து ஆதரவளிப்பது அவசியம் என்று சீன அதிபர் கூறினார்.

தொடர்புடையவை:  பாகிஸ்தானுக்குச் செல்ல இலங்கை அணிக்கு அனுமதி

மேலும் ஜி 20 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பின் பங்கை வலுப்படுத்த வேண்டும் என்றும் உலகளாவிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

  • திருமலை சோமு
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *