திபெத் வளர்ச்சிக்கு வழிவகுத்த அமைதியான விடுதலை!


17 விதிகள் என்று அழைக்கப்படும் மத்திய அரசு மற்றும் திபெத்தின் உள்ளூர் அரசுக்கிடையேயான உடன்படிக்கை 70 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்ஜிங்கில் கையெழுத்தானது. இதுவே திபெத்தின் அமைதியான விடுதலைக்கு வழிவகுத்தது. விடுதலைக்குப் பின் வெளி உலகத்தை காணும் திபெத்திய மக்கள் நிலப்பிரபுத்துவ ஆட்சியின் போது எவ்வளவு பின்தங்கி இருந்தோம் என்பதை உணர்ந்தனர். 1951 ஆம் ஆண்டில் திபெத் விடுதலை அடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய சமூக அமைப்பை விட்டு அனைத்து தரப்பு மக்களும் வெளியேறத் தொடங்கினர்.
திபெத்துக்கும் சீனாவின் பிற பிராந்தியங்களுக்கும் இடையில் இருந்த வளர்ச்சி வேறுப்பாட்டின் மூலம் சோசலிச அமைப்பின் மேன்மையையும் செயல்திறனையும் அவர்கள் நன்கு உணரத் தொடங்கினர். மேலும் பிராந்திய வளர்ச்சியின் மூலம் திபெத்திய மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மத்திய அரசாங்கத்தின் பணியைப் பாராட்ட தொடங்கினர்.


தங்களது சொந்த விதியை தாங்களே தீர்மானிக்க திபெத்திய மக்கள் நிலப்பிரபுத்துவ சேவையை ஒழிப்பதற்கும் பிராந்தியத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதற்கும் 1959-ல் மத்திய அரசின் நடவடிக்கையை உறுதியாக ஆதரித்தனர். திபெத் தன்னாட்சி பகுதி 1965 இல் நிறுவப்பட்டது. அப்போது முதல் திபெத்திய மக்கள் நாட்டு விவகாரங்களை நிர்வகிப்பதில் சம உரிமைகளையும், பிராந்தியத்தை நிர்வகிக்கும் அரசியல் உரிமையையும் அனுபவித்து வருகின்றனர்.


திபெத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக, நிதி, வரிவிதிப்பு, உள்கட்டமைப்பு கட்டுமானம், தொழில்துறை மேம்பாடு மற்றும் கால்நடை வளர்ப்பு முதல் கிராமப்புற வளர்ச்சி, கலாச்சாரம், கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான முன்னுரிமைக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.


திபெத் வளர்ச்சிக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு அதிகரித்து வருகின்றன, மேலும் தொடர்ச்சியான முக்கியமான பொறியியல் திட்டங்கள் இப்பகுதியில் உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்தி உள்ளூர்வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. உதாரணமாக, திபெத்தில் இன்று 118,800 கிலோமீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. இது 1965 ஐ விட 8.5 மடங்கு அதிகம். உண்மையில், நவீன நெடுஞ்சாலைகள், தொடர் வண்டி வசதி மற்றும் சிறந்த விமான போக்குவரத்து வசதிகளும் திபெத்தில் போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கி உள்ளது.


மத்திய அரசு மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் ஆதரவோடு, திபெத் பொருளாதார முன்னணியில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டில் 129 மில்லியன் யுவான் (20.04 மில்லியன் டாலர்) மதிப்பில் இருந்த திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 ஆம் ஆண்டில் 190.27 பில்லியன் யுவானாக உயர்ந்தது – இது கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் இருந்தபோதிலும் முந்தைய ஆண்டை விட 7.8 சதவீதம் அதிகமாகும்.

தொடர்புடையவை:  கொரோனா வைரஸ் இந்த ரத்த வகை கொண்டவர்களை எளிதில் தாக்கும்


கடந்த ஆண்டு, பிராந்தியத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் தனிநபர் செலவழிப்பு வருமானம் முறையே 41,156 யுவான் மற்றும் 14,598 யுவான் ஆகும், இது ஆண்டுக்கு 10 சதவீதம் மற்றும் 12.7 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிர, முழுமையான வறுமை ஒழிப்பு திட்டத்தின் மூலம் திபெத்தின் கிராமப்புறங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பு வறுமையில் இருந்த 74 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட அப்பகுதியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களும் தற்போது உணவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கட்டாய கல்வி மற்றும் அடிப்படை மருத்துவ வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. திபெத் ஒரு முழுமையான கல்வி முறையை உருவாக்கியுள்ளது, தொடக்கப்பள்ளியில் குழந்தைகளின் வருகை 99.93 சதவீதத்தை எட்டியுள்ளது .


திபெத் முழுவதிலும் மருத்துவ பராமரிப்பு கிடைப்பதால், தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது, திபெத்தின் ஆயுட்காலம் பொறுத்தவரை, இது 1951 இல் 35.5 ஆண்டுகளில் இருந்து 2020 ல் 71.1 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. திபெத்திய மக்களின் ஆரோக்கியம் பெரிதும் மேம்பட்டுள்ளது மட்டுமல்லாமல், பிராந்திய மக்கள் தொகை அமைதியான விடுதலைக்கு முன்னர் 1 மில்லியனிலிருந்து 2020 ஆம் ஆண்டில் சுமார் 3.65 மில்லியனாக அதிகரித்துள்ளது.


மேலும், கட்டுமானத் திட்டங்கள் திபெத்தில் பரவலாக உள்ளன, பொது வசதிகளான நகரங்களில் உள்ள ஜிம்கள் முதல் கிளினிக்குகள், பள்ளி விடுதிகள், சாலைகள் மற்றும் கிராமங்களில் நீர் திட்டங்கள் வரை பரவியுள்ளன.
திறமைகளை வளர்ப்பதற்காக, திபெத்திய இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பிற மாகாணங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் படிக்க அனுப்பப்படுகிறார்கள். இந்த ஏற்பாடு சீனாவின் பிற பகுதிகளிலிருந்து திபெத்திய இளைஞர்களுக்கும் அவர்களின் சகாக்களுக்கும் இடையிலான தொடர்புகளை பெரிதும் அதிகரித்துள்ளது. போக்குவரத்தின் முன்னேற்றம் திபெத்துக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அதே வேளையில், தனிநபர் வருமானங்கள் அதிகரித்து வருவதால், திபெத்திய மக்கள் அதிக எண்ணிக்கையில் பிராந்தியத்திற்கு வெளியே வேலை, கல்வி அல்லது விடுமுறை நாட்களைக் கழிக்க தூண்டுகிறது.

  • திருமலை சோமு
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *