நீங்கள் தான் கடவுள்: செவிலியர்களை தரையில் விழுந்து வணங்கிய டீன்

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன், கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்களுக்கு தரையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கு வருகை தந்த, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன், ‘தற்போதைய நெருக்கடியான சூழலில் நீங்கள் தான் கடவுள்’ எனக் கூறி, கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, செவிலியர்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this
தொடர்புடையவை:  திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை

One Comment

  • Saradha Santosh

    உண்மையில் செவிலியர்கள் போற்றத்தக்கவர்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *