புதுச்சேரியில் புறப்பட்ட புரட்சிக்கவி

பாரதிதாசன்
பாருக்கே கவிதாசன்
புதுச்சேரியில் புறப்பட்ட புரட்சிக்கவி
புரட்சியிலும் புதுமை செய்த புதுக்கவி
நாட்டை ஆண்ட வேந்தர்கள் பலர் இங்கிருக்க…
தமிழையாண்ட வேந்தன் நீ யன்றோ…!

ஆசிரியர் ஆறுமுகம் ஜெயகாந்த் கோவை

ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தர் பாரதிதாசனார்

தமிழுக்கு அமுது
என்று பேர்….
அந்த தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்…
என்று தாய் தமிழை உயிருக்கு இணையாக கவிதை எழுத
அது பாடலாகி பட்டி
தொட்டியெல்லாம்
பறவியது…

பாவேந்தர் பாரதிதாசனின்
பார்ப் புகழைப்
பாமரரும் அறிய
வழி காட்டியது….

கனக சுப்பு இரத்தினம்
என்னும் இயற்பெயர்
கொண்டவர்…
பாரதியாரை பின்
தொடர்ந்து
அவரது கவிதைகள்
இருந்தமையால்
அன்னாரின் பெயர்
பாரதி தாசன் என்றே வழங்கப்பட்டது…..

ஆளுமையும் ஆதிக்க குணமுடைய
ஆண்களுக்கு என்றும்
பெண்ணின் தோழமை
அவசியம்….

நாட்டின் கண்களாகிய
பெண்களுக்கு
அழகோடு அறிவும்
பேசப்பட வேண்டிய அவசியத்தை
நன்கு உணர்ந்தவர்….

ஆழமான கவிதை வரிகளில் நயமாக எடுத்துரைத்தார்….
தேவைக்கேற்ப சற்று காரமாகவும் இடித்துரைத்தார்….

பெண்களைத் தலைவாரி
பூச்சூடி அழகு படுத்திப்
போகப் பொருளாகவே
பார்த்த பார்வையை
மாற்றி….

அவர்களுடைய
அறிவுக் கண்கள்
திறக்கப்பட
வேண்டினார்….

பெண்களின்
பயம் களைந்து
பாடசாலைக்குச் செல்ல
வேண்டும் என்பதை
தலைவாரிப் பூச்சூடி
உன்னை பாடசாலைக்கு
அனுப்பி வைத்தார்
உன் அன்னை என்ற
கவிதை வரிகள் உணர்த்துகிறது….

வளமான வாழ்கைக்கு செல்வமான பெண்கள் கல்வி கற்று மன வீரத்துடன் போராடி பெற்ற குழந்தைகளை எந்த சூழலிலும் சாதூரியமாக வளர்த்தெடுக்க….

பெண்களின் அறிவுக் கண்கள் திறந்திருக்க வேண்டி தன் வீரத்தாய்
கதை மூலம் எழுதி போராடினார்…

அவரது கல்வி தமிழோடு மட்டும் நில்லாது பிற மொழிகளையும் கற்றுத்தேறி உலக அறிவு பெறவும்…

உடல் நல தெளிவும் வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்…

சமகால பெரியவர் சுவாமி விவேகானந்தரும் புகழுமாறு தனது வாழ்கையை வடிவமைத்தார்….

எழுத்துலகில் தன் காலத்தை வென்றவர் தனது எழுபத்து மூன்றாம் அகவையில் புரட்சிக் கவி வானில் தன் சிறகை விரித்து ஒளிரும்
நட்சத்திரமானார்….

தேவி இராமசாமி
மலேசியா.

ஃஃஃஃஃஃஃஃ

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

‘சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!!
சிம்புட் பறவையே சிறகை விரி!! ‘யென

வாழ்த்துக்கவிதை எழுதி யனுப்பினார் பாவேந்தர்
வாஞ்சையோடே தமிழர் எழுச்சி மாநாட்டிற்கே!

எண்கால்கள் கொண்ட பழம்பறவை யென்றே
எடுத்தியம்பும் சங்கத்தமிழ் நூல்களதை!

விரைவாக தமிழரினம் உயர்ந்திடவே
வீறுகொள்ள வேண்டுமென்றார் சிம்புட் போலே!

மடக்கி நம்மை போடுவோர்க்கு முடங்கிடாமல்
அடக்கி ஆள முயல்வோருக்கு சிக்கிடாமல்

சிறப்பான இலக்கியமும் சீர்மைமிகு இலக்கணமும்

பெரும்பரப்பான நிலவுலகில் பரப்பிடவே

சிம்புட்போலே சிறகை விரித்து பறந்திடுவோம்!

அருந்தமிழின் அருமை யெல்லாம்
அகிலம் உணரவே

எண்கால்கள் நடைபயின்று
எட்டுத்திக்கும் சென்றிடுவோம்!

எக்காலமும் வாழுகின்ற
எம்தமிழர் புகழ் சாற்றிடுவோம்”!

அன்புடன்,
ஜாக்குலீன் மேரி
நாமக்கல்

ஃஃஃஃஃஃஃஃ

புதுச்சேரியில் பிறந்த
புரட்சிக் கவிஞனிவன்.

புதுமை கருத்துகளை
படைத்திட்ட
தமிழ்ப் புலவன்.

பாரதியின் தலையாய மாணவன்.
உள்ளம்
முழுவதும்
தமிழாலானவன்.

பாரெங்கும்
தமிழைப்
பரவச் செய்தவன்.
உரிமைச்
சங்கை முழங்கச்
செய்தவன்.
தமிழர்கள்
பங்கை செய்யச்
சொன்னவன்.

எண்ணங்களை
எழுச்சி மிகு
எழுத்துக்களால்
வடித்திட்ட மகாசிற்பி.
இலக்கிய முத்துக்களை தம்முள்
சுமந்த தமிழ்ச்சிப்பி.
அறியாமை இருள்
அகற்றிய எழுஞாயிறு.
எட்டுத்திக்கிலும்
பறந்து திரிந்த தமிழ்ப்பறவை.
இனமானக்
குயிலும் இவன்
பாரதியின்
இளவல் இவன்
சுயமரியாதைச்
சுடர் ஏற்றிய
சுப்பு ரத்தினம்.
தமிழர்தம் நிலையை
உணரச் செய்த
தனிப் பெருங்கவிஞனிவன்
பாவமைத்து
பாரசைத்த
பாரதிதாசன்

பாண்டிச்சேரி
பிறந்தானிவன்.
பாவலர்களில்
தலைவனிவன்.

பாவலர் பரகாலன் மங்கை நல்லூர்

ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தரை போற்றுவோம்.

கவி தேடி தவித்து வந்த எங்களை
தாவிப் பிடித்தது உன் தமிழ்
பூவைத்து பொட்டு வைத்த பெண் போல
புவி எங்கும் வலம் வருகிறது.

நீ எழுதும் போது நாங்கள் இல்லை
உன் எழுத்து இன்றி நாங்களில்லை
நீ எழுதிய எழுத்துக்களின் பாணி
எங்களை ஏற்றிவிட்ட ஏணி.

சங்கே முழங்கு என்று முழங்கி
எங்களையும் அதில் மூழ்க வைத்தாய்
எங்கெங்கு கேட்குமோ அது கேட்டது
சிங்கங்கள் போல் எங்களை எழுப்பியது.

தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும்
விடாதே என்று உரக்க சொல்லி
தாயை விட தமிழ் உயர்ந்ததாய்
எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாய்.

கொலை வாளினை எடடா மிக
கொடியோர் செயலை அறவே என்றும்
கொட்டு முரசே கொட்டு முரசே என்றும்
விட்டுப் பிரியாமல் தமிழரை இணைத்தாய்.

கவிஞர்
மாங்காடு
இரா.கஜேந்திரன்

ஃஃஃஃஃஃஃஃ

புதுவைக்கடல் எழுதும் கவிதை
புத்துணர்ச்சியில் ஆர்பரித்தே
பாவேந்தர்… பாவேந்தர்…என்றே முழங்கும்

வேகமாக நடந்த ஆமை
பாரம் தாங்கும் வரை
பாவேந்தர் கவிதையெல்லாம்
முதுகில் ஏற்றும்…

மெல்ல,மெல்ல கடல்வாழ்உயிரினத்திற்குப்
பாவேந்தர்பாட்டையைக் கற்பிக்கும்…

அதைக்கேட்ட டால்பீனும்
அழகின்சிரிப்பாய்
ஆடிப்பாடி மகிழும்
மீன்கள் கூட
பெல்லி நடனம் ஆடும்….

தொடர்புடையவை:  காதலர் தின சிறப்பு கவிதைகள்

புரட்சிப்பாட்டைக் கேட்டு
திமிங்கலங்களும் பொல்லாத
அன்னியர்களை வீழ்த்தும்
அதுவும்
தமிழ்.. தமிழ் என்றே முழங்கும்…

நத்தையும்,நண்டும் இருட்டுஅறையை
விட்டு புதுஉலகம் நாடும்…

புதுவைத்தமிழன்
சொல்லித்தந்த
அரும்தமிழைப்
பாடும்….

நீலவானத்தில் ஓடுகின்றன
வெண்ணிலவும்
கடலில் இறங்கிக் கேற்கும்…

பாவேந்தரின் பாடல்
மயக்கத்திலே
பாதிஉடலைத்
தமிழுக்குத்
தாரை வார்த்துக்
கொடுக்கும்….

இயற்கையெல்லாம்
பாண்டியன்பரிசு பெற்றதாய்
குதுக்களித்தேப் பாடும்

குயில்கள் எல்லாம் கேட்டுவிட்டு
தலைவாரிப்பூச்சூடிப் பள்ளிக்குச்
செல்லும்….

தமிழா நீ மட்டும்
மயக்கத்தில் இருக்கின்றாய்
மதியோடு அவன் சொல்லும்
நெறியோடு வாழ்ந்தால்..

அந்நியனும் உன்மென்னியைப்
பிடிக்கும் நிலைவருமா?
அவன் போட்டப் பாதையிலே
நடந்து வந்தால்
உலகமெங்கும் தமிழ் மணக்கும்
பாவேந்தர் புகழ் மணக்கும்

செ.புனிதஜோதி

ஃஃஃஃஃஃஃஃ

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

எழுதுகோலில்
எரிமலையை மையாய் ஊற்றி
எழுத்தெல்லாம் நெருப்பாக
எழுதி வைத்தான்

ஏனென்று கேட்காத
ஏழைகளும் வாழ்வினிலே
ஏற்றம் பெற
ஏணியாக எழுத்திட்டான்

எழுத்தில் தீமூட்டி
எழுதியவன்
எழுத்தெல்லாம்
எரிப்பந்தம் கொளுத்தியவன்

பாமரனுக்கும் ஏதிலிக்கும்
பாட்டெழுதி
பாங்குடனே வாழ்ந்திட்ட
பாரதிதாசன் இவன்

எவனுக்கும் அஞ்சாத சொற்காரன்
எதிரியும் பாராட்டும் மனசுக்காரன்
என் தமிழாய் வாழும் புதுவைக்காரன்
எங்களுக்கு இவன் சொந்தக்காரன்

எம் கே ராஜ்குமார்
ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தர் பாரதிதாசன்

பாரதியின் தாசனாய் பாரதி பித்தனாய் வாழ்ந்த மாபெரும் கவிஞன் பாரதிதாசன் பிறந்ததினம் இன்று!

தமிழனுக்காக தமிழுக்காக போராடிய தரணி போற்றும் தமிழ்மகன் பாரதிதாசன் நமது தமிழகத்துக்கு கிடைத்த ஈடில்லா கவிஞன்!

தமிழ் கவியெனும் அம்புகளால் தொடுத்து கவியோடு புரட்சியையும் புகுத்த புரட்சி கவிஞன் பிறந்த தினத்தை என்றும் மறவாது இருப்போம்.

வெ.பாரதி

ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தர் பாரதிதாசன்

அழகுத் தமிழை அமுதாய் மாற்றி
பழகிய தமிழை பாரினில் உயர்த்தி
உயிருக்கு நிகராய் உவமை சொன்னாய்
உயிரே எங்கள் உன்னத தமிழென்றாய்

சங்கம் வளர்த்த சரித்திரத் தமிழை
சங்கால் முழங்கி சபையில் ஏற்றினாய்
பாரதி மீதுள்ள பற்றினால் பெயரை
பாரதி தாசனென்றே பாங்காய் மாற்றினாய்

பொங்கிடும் கருத்துக்கள் பொழிந்திடும் பாக்களில்
தங்கிடும் நெஞ்சினில் தனாலாய் ஊட்டிடும்
புரட்சிகள் படைத்திட புதுவுலகம் அமைத்திட
புரவிகள் போலே புயலாய் புறப்படும்

எண்ணங்கள் யாவையும் எழுத்தால் செதுக்கி
எண்ணற்ற காவியம் எழிலாய் படைத்தாய்
நூல்களின் வழியே நுழைந்தாய் மனதில்
ஆல்போல் எங்கும் அடர்ந்தே தந்தாய்

புரட்சிக் கவிஞர் புகழே சொல்லும்
அரசனாய் பாக்களில் ஆட்சியும் செய்தே
பாவேந்தர் ஆனாய் பாரதி பித்தனே
நாவலின் மூலம் நற்கருத்தினை விதைத்தாய்

காலங்கள் மறைந்தாலும் கவியாற்றல் மறைந்திடுமோ
கோலங்கல் மாற கோல்பட்ட பாடும்
அழியாத இடத்தை அவனியிலே தந்து
வழிநெடுக்க என்றும் வாழ்த்திடுமே பாவேந்தனே!!!

பூர்ணிமா சங்கர்
கோயமுத்தூர்

ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தர் பிறந்த நாளில் சபதம் கொள்வோம்

பா ரெங்கும் வாழும் தமிழர்
பா வேந்தர் விழா காணும்
சீர் இன்று நடக்கும் நிகழ்வு
மா பெருமை தமிழுக்கும் தமிழர்க்கும்.

உயிர் ஆகி தமிழ் நினைக்க
உரை கண்ட உண்மை உணர்வன்
மறைவு நிலை காணும் வரை
மறை என் தமிழ் என்றான்.

என் அருமை தமிழ் பெருமக்காள்..!
கண் போன்றே இவர் கூற்றை
நாம் கணித்து செயல் பட்டால்
யார் தடையும் தமிழ் வெல்லுமாம்.

ஒத்தத் தமிழர் மொத்தம் கூடி
வித்தைத் தமிழ் சீர் காப்போம்.
மந்தைத் தமிழரென நினைக்கும் மடமையர்
சிந்தை உணர சீர் படைப்போம்.

கைக்கூப்பி கரம் பிடித்து கெஞ்சுகின்றேன்
மெய்யென தரை ஏற்ற தமிழை
பொய்யர் பொசுக்க நினைப்பதை அணைக்க
செய்வோம் சிறந்ததை சீராக இணைந்து.

பா வேந்தன் பிறந்த நாளில்
நா மெல்லாம் சபதம் கொள்வோம்
மா மொழி தமிழ் ஒன்றே
பூ வெங்கும் புரியச் செய்வோம்.

மைசூர் இரா.கர்ணன்

ஃஃஃஃஃஃஃஃ

புதுவையில் பூத்த புரட்சி பூவே

தமிழை அமுதாய்
சுவைத்த பாவலனே

சாதியில்லை
என
சாற்றியவனே

சங்கத்தமிழ்
சங்கு எடுத்து
ஒலித்தவனே

எங்கெங்கு காணினும்
சக்திஎன
பெண்மை
போற்றியபெருந்தகையே

அழகின் சிரிப்பு
குடும்பவிளக்கு
தந்து இருள்அகற்றிய
கோமகனே

இருண்ட வீட்டில்
திரண்ட செய்திகள் எடுத்துரைத்த
நாவலனே

பொங்கு
தமிழர்க்குஇன்னல் விளைத்தால்சம்காரம்என்ற
வீரத்தமிழனே.

குயில் இதழ்மூலம்
குவலயம்
பேசிய ஆசானே.

அரசியலும்
உனக்குஅத்துபடி
உன்சித்தபடி நம்
தமிழ் வாழும்
தலைமகனே.

பலமொழி அறிந்தாலும்
தாய் மொழி
வளர்த்த தங்கமே!

தமிழனின்அங்கமே
உன்னை போற்றுதே தமிழ் சங்கமே!

பிறந்த நாளில்
பா மலர் கொண்டு பாமாலை சூட்டி
வாழ்த்துகிறோம்.
இரா.விஜயா

ஃஃஃஃஃஃஃஃ

புரட்சிப் பாவலர்

புரட்டுத் தனத்தைப் புரட்டிப் போட்ட
புதுவைத் தோன்றலர் ! – எங்கள்
புரட்சிப் பாவலர் !
உரத்தை மறத்தை ஊன்றி உள்ளம்
உயிர்த்த ஆற்றலர் ! – உண்மை
உலக ஏந்தலர் !

குருட்டு மனத்தார்க் குட்டை யுடைத்தக்
குமுகக் காவலர் ! – தமிழ்க்
குலத்தின் கொண்டலர் !
மருள வைத்த மந்தை யாவும்
மலைக்கச் செய்தவர் ! – துயர்
மாய்த்த கோ’யிவர் !

தொடர்புடையவை:  மாணவர் கடமை

பெண்கள் கல்வி கற்க வேண்டி
பெரிதும் விழைந்தவர் ! – அவர்
பெருமை பெற்றவர் !
எண்ணி யெண்ணி ஏற்றம் பெற்ற
இனிய முத்திவர் ! – நல்
எண்ண வித்திவர் !

மறும ணத்தை ஆத ரித்த
மாண்பு பெற்றவர் ! – பெரியார்
மனத்தின் முரசிவர் !
பொறுமை பொருத்தம் இல்லா ஈன
போக்கை வெறுத்தவர் ! – மண்
போற்றும் புதுமையர் !

இனமும் மொழியும் மேன்மை காண
எழுதி வந்தவர் ! – அதில்
இன்பம் கண்டவர் !
தனது தமிழே அமிழ்தம் என்று
தானே களித்தவர் ! – தமிழாய்த்
தழைத்த தாய்மையர் !

எங்கும் வாழும் இனிய பாட்டின்
இசையாய் வாழ்பவர் ! – நல்
எழுச்சி ஊற்றிவர் !
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
இனிக்க வைத்தவர் ! – எங்கள்
புரட்சிப் பாவலர்

படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி
ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தே வா

புதுவையில் பிறந்தே
புரட்சிக் கவிஞராய்
புதுமைக் கவிஞராய்
புதுப்பாதைஅமைத்தாய்

வதுவைமறுமணங்களை
வரவேற்றுப் பாடினாய்!
வகைவகையாகத் தான்
பாக்கள் வடித்தாய்!

பாண்டியன் பரிசும்
பிசிராந்தையார் பாவும்
பாங்காய் பாடியே
பரிசாய் தந்தாய்!

அழகின்சிரிப்புஅளித்தாய்
ஆரியமாயைஎதிர்த்தாய்
அஞ்சாத அரிமாவாய்
ஆள்வோர் எதிர்த்தாய்!

பழகியே பாரதியுடன்
பரிவான சீடனாய்
பாரதி தாசனென
புதுப்பெயர் பெற்றாய்!

குடும்ப விளக்கெனும்
குறுகிய காப்பியம்
குலமகள் காப்பியமாய்
கொடுத்தே சிறந்தாய்!

சிறுகுடும்ப நெறியை
சிந்தையில் விதைக்க
சிறப்பான பாடல்கள்
சீரெனவே தந்தாய்!

வறுமையை பாடினாய்!
வளமையை பாடினாய்!
வா வா பாவேந்தே!
வணங்கிவரவேற்கிறோம்

பாவலர் புதுவை
இளங்குயில்

ஃஃஃஃஃஃஃஃ

மனம் கவர்ந்த கள்வன் இவன்
மக்கள் மனம் புகுந்த கவிஞன் இவன்
பாட்டாலே புதுமை புகுத்தியவன்
பாரினிலே புலமை பெற்றவன்
எண்ணங்களை எழுத்தாக்கியவன்
எழுத்துக்களை உயிராக்கியவன்
சொல்லுக்குள்ளே பகுத்தறிவு பூட்டியவன்
புயல் போலே மடமையைப்
போக்கியவன்
நல்லறிவு ஊட்டியவன்
இவன் வழி நடந்து
இன்மொழி வளர்ப்போம்….

வெ. வசந்தி கொல்லுமாங்குடி

ஃஃஃஃஃஃஃஃ

வேந்தரான புலவர்

பாரதி என்ற புலவரிடம் பாடம் பயின்று
பாவலரான பைந்தமிழ் புலவரிவர்!
புலவர் நிலை பதவி உயர்வாகி
பாவின் வேந்தரான பாரதிதாசனார்!

தஞ்சை த இராமநாதன்

ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தர் பாரதிதாசன்

புதுவையை பிறப்பிடமாய்க் கொண்டு பெரும் புகழ்தனை பெற்றிட்ட பாவலரே!

தமிழ் ஆசானாய் விளங்கி தமிழ்தனை வளர்த்திட்ட தங்கமகனாரே!

முறுக்கு மீசை பாரதியின் மேலுள்ள தீராத காதலினால் பாரதிதாசனாரான கனக சுப்பு ரத்தினமே!

புரட்சி கவிஞராயும் பாவேந்தராயும் பாரெல்லாம் புகழ்ந்திட வலம் வந்திட்டவரே!

தமிழை அமிழ்தாக்கி அமிழ்தாம் தமிழை உயிராக்கிய தலைமகனாரே!

புதியதோர் உலகம் செய்வோம் என்று புத்துணர்ச்சி ததும்பிட உரைத்திட்ட புரட்சியாளரே!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கென்ற தமிழின் வித்தகரே!

தமிழுடன் இரண்டறக் கலந்து எங்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிட்ட பெருந்தகையோரே நின் புகழ் என்றென்றும் வாழ்ந்திடும் இப்புவிதனிலே!

பிரியமுடன்
இரா. கோமதி
பொள்ளாச்சி.

ஃஃஃஃஃஃஃஃ

எனை ஈர்த்த பாவேந்தர்
எதற்கும் துணிந்தவன் துணிவின் தலைமகன்
எதிர்க்கும் திறனில் எதற்கும் அஞ்சாதவன்
எதிர்க்கும் வார்த்தையில் உணர்ச்சி தமிழ்மகன்
வதைபடும் தமிழர்களை வனப்பாய் மாற்றியவனே.

பாரதிதாசன் உங்கள் பாக்களுக்கு நாங்கதாசன்
நேரெதிர் நின்று நற்றமிழ் வளர்த்தவன்
வாராத பகையை வந்ததென்று தமிழுக்கு
தீராத வேகங்கொண்டு தீய்ந்திட்ட தமிழ்மகனே.

தூங்கும் புலியா தமிழா எழுந்திடு
ஓங்கும் பறையோடு உணர்ச்சி ஊட்டியவன்
தீங்குறு பகைவரை தீந்தமிழால் தாக்குவார்
மங்கும் தமிழரை வேல்கொண்டு தாக்குவாரே.

கிளர்ச்சி சொல்கொண்டு வளர்ச்சி செய்தவன்
தளர்ச்சி இல்லாத தமிழிலே தன்னலம்
வளர்ச்சி செய்வதிலே புரட்சி பாவலன்
திரட்சி தமிழ்கொண்டு உரமேற்ற உழைச்சவனே.

ஓடப்பரும் உயரப்பரும் ஒப்பப்பர் ஆனார்
ஓயாமல் உழைத்தே உயரப்பர் ஆனார்
உயர்வான தமிழே உயிருக்கு நேரானார்
அயலன் மிரண்டிட அருந்தமிழ் போரானாரே.

மழையென மேகம் தழைத்திட வேண்டும்
மயில்கழுத்து இல்லா மங்கையரே வேண்டும்
அமுதென தமிழை அள்ளிட வேண்டும்
அன்னைத் தமிழ்வளத்தால் ஆளவும் வேண்டுமே.

உயிரை உணர்வை வளர்க்கும் தமிழே
பயிரென காத்திட்ட பைந்தமிழ் வீரனே
பாருக்கு வீரத்தை பங்கெடுத்த தமிழே
வேரிருக்க நானெதற்கு வேக்காட்டில் வீழ்வேனே.

புரட்சி பாவலன் நரட்சி வீழாதவன்
முளைக்கும் செடியிலே முத்தமிழ் வளர்ப்பவன்
என்உயிர் என்பேன் கண்டீர் தமிழை
கண்ணெனத் கொண்டே கடமை வீரனவனே.
ச.செல்வகுமாரவேல்
பண்ணுருட்டி

ஃஃஃஃஃஃஃஃ

புரட்சிக்கவி பாரதிதாசன்

தமிழின் நேசன்
புரட்சியின் தேசன்
பாக்களின் வாசன்
பாரதிதாசன்

சித்திரையில் மலர்ந்து
சித்திரையில் மறைந்த – புகழ்
நித்திரை காணாத
முத்திரை பதித்த
முத்தான தமிழ்கவி
எங்கள் புரட்சிக்கவி!

தமிழ்கவி உதிர்த்த பாவேந்தரின்
உன்னத வாயிற்கு
கீரிடமாக வாழ்ந்தது
கட்டை மீசை!

புரட்சிக்கனலைத்
என்றும் தூண்டிவிடும்
மிரட்டும் அவரின் பார்வை!

வெளிப்படையானவர் என்பதாலோ
அழகாய் வெளிக்காட்டியது
அவரின் மனதை – அவரின்
தேகம் சூழ்ந்த வெள்ளாடை!

தொடர்புடையவை:  கவிச்சுவை!

நரை தள்ளாது
என்றும் வாழுகிறது
பாவேந்தரின் படைப்பு
’பிசிராந்தையார்’ ஆகவே!

கிறுக்கன் என்று
அவர் எழுதியவை
தமிழின் புரட்சி கிறுக்கல்கள்!

கிண்டல்காரன் என்ற பெயரில்
தூண்டிவிட்டார் புரட்சித் தீயை!

’குயில்’ ஓசையும்
புரட்சி செய்தது
தமிழ் பாடியது
அவர் நடத்திய இதழால்!

தமிழுக்கு அமிழ்தம் என்றவர்
மறைந்தும் வாழ்கின்றார்
தமிழுக்கு அமிழ்தமாகவே!

சா. கா. பாரதி ராஜா

ஃஃஃஃஃஃஃஃ

புரட்சிக் கவிஞரைப்
போற்று!

பொங்கிடும் ஊற்றாய்ப்
பொலிவில் தமிழினை
எங்கும் நிறைந்திட
ஏற்றமே-இங்கே:
அரணாகத் தந்திட
ஆர்த்திடும் செய்கைப்
புரட்சிக் கவிஞரைப் போற்று!

தொண்டினை ஆற்றிட
தொய்விலாச் செய்கையால்
உண்மை இருக்க உணர்ந்துமே-கண்டிடல்:
பண்பில் தமிழினைப்
பாருமே போற்றிடத்
திண்மையாய் வாழ்வினில் தீர்வு!

மதிப்புறு முனைவர்
இரா. இரமணி ஆசிரியை
சேலம்.

ஃஃஃஃஃஃஃஃஃ

புரட்சிக் கனல்

புதுமை சங்கெடுத்து புரட்சி ஒலிகூட்டி

புதுவையில் முழங்கிய புயல் அன்றோ நீர்!.

நீரின் தண்மையும் நெடுவளி தாக்கமும்

அக்கினிக் குஞ்சுகளாய் அமைந்ததன்றோ
அருங்கவி!

கவிஞரில் ஏறு
கனிச்சாறு தோய்த்த

வேர்ப்பலா அன்றோ செந்தமிழ் பாடல்

பாடலோடு பாருக்கு சேதிசொன்ன சோதி

பாரதிக்கு தாசன் எங்களின் நேசன்

திண்டுக்கல் பி மீராபாய்

ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தே.. பாவேந்தே..
வா வா..இன்னும்
பாதையிலே நிற்பவர்க்காய் வா வா..
கூர்வேலாய்.. பாய்ந்து இங்கு வா வா.. இந்த கூறுகெட்ட தமிழருக்காய் வா வா..

வடவர்களின் காலடியில் விழுந்து கிடக்கிறான்! அவன் வாய்க்கரிசி போட்டாலும் வாழ்க என்கிறான்! தொடர்கதையாய் அடிமைகளாய் வாழ்ந்து மடிகிறான்! அதை தொட்டு எழுத வேண்டுமய்யா வா வா..

சாதியென்ற கூண்டுக்குள்ளே புலிகள் தூங்குதே.. ஆதியிலே பிறந்த இனம் தினமும் ஏங்குதே.. வீதியிலே போதையிலே புரண்டு திறியுதே.. இந்த வெட்கநிலை மாறுதற்கு தீக்கனலை ஏந்தியிங்கு வா வா..

வே.கல்யாணகுமார். பெங்களூரூ.

ஃஃஃஃஃஃஃஃ

புதுவை தந்த புரட்சிக் கவியே
பொதுவுடைமையில் பூத்த நறுமலரே
பொதுவுடைமை ஆனதே நின்
படைப்பும்
எண்ணத்தில் புரட்சி எழுத்தில்
புரட்சி
சொல்லில் புரட்சி செயலில் புரட்சி
தடம் பதிக்கா இடமில்லை
தமிழ்க் கலைகள் அனைத்திலுமே
பிழைப்புக்காய் எழுதாமல் மக்கள்
பிழைப்பதற்காய் எழுதியவரே
குயிலைக் கவியாக்கி
கூவ வைத்தீர் நும்மிதழில்
நட்புக்கிலக்கணமாம்
நற்குடி பிசிராந்தையார்
எழுதிப் பெயர் பெற்றீர்
எந்நாளும் அழியா அரசு
பட்டமும் பெற்றீர்

அமுதைத் தமிழாக்கி அள்ளிப் பருகியும்
ஆயுள் நீடிக்க வழியில்லை
மதுவெனத் தமிழ் பருகியும்
போதையில் தள்ளாடவில்லை நீர்
வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடிய தோள்களெல்லாம்
வன்கொடுமைச் சாக்காட்டில்
மாள்கின்றார்
தமிழ்க் கடை தேடாமல்
மதுக்கடை தேடுகின்றார்
மதிமயங்கிச் சீரழிகின்றார்
தெருவோரம்்வீழ்ந்து கிடக்கினரறா்ர்
எழுந்து நிற்பதெப்போது?
தமிழினி மெல்லச் சாகுமென்றீர்
அம்மி தாடியென்றே ஆரணங்கு
பெற்ற பிள்ளை
அல்லோல கல்லோலப் படுதிங்கே தமிழ்
விரைந்தே சாகுதிப்போ
மக்கள் மனந்திருந்திடவே
மறுபிறவியெடுப்பாயா? மண்ணில் வந்து பிறப்பாயா?
பாவேந்தே நும் நினைவில்!

சே.முத்துவிநாயகம்
திருநெல்வேலி

ஃஃஃஃஃஃஃஃ

பாரதியின் தாசனே
பாரதிக்குத் தாசனே
உந்தன் பெருமை சொல்லிட நானும் வந்தேனே
பாட்டால் சொல்ல வந்தேனேபாரதிதாசனின் பிறந்தநாளாம்
இன்று பார் புகழும்
நல்லநாளாம்

தமிழின் முதலில்
அ_ வுக்கு அம்மா என்றவர்
பாரதிதாசனே

சித்திரையில் மலர்ந்து சித்திரையில் உதிர்ந்தவரே
சித்திரமாய் எல்லோரின் நெஞ்சில் நின்றவரே

தமிழுக்குத் தன்னையே ஈந்தவரே
தன்மானம் காத்தவரே
தரணிபோற்ற வாழ்ந்தவரே

உந்தன் வீறுகொண்ட
பாடல்கள் தமிழின் கீரிடமாய்
வலம் வந்த தே

புரட்சிக்கனலை விதைத்து
புதுமைக் கருத்தைப் பரப்பி
குயில் ஓசையும்
புரட்சி செய்தது
கனிச்சாறு தோய்ந்த வேர்ப் பலா
இனித்தது
செந்தமிழ்ப்பாடலாய்
பாடலோடு சேதி சொன்ன தாசன் எங்கள் பாரதிக்குத் தாசனின்
தன்மானப் பாடல்
தரணி சிறக்க வந்ததே
தரணி செழிக்க வந்ததே

முனைவர் கவி சு.நாகவள்ளி,மதுரை

ஃஃஃஃஃஃஃஃ

பாவேந்தர் பாரதிதாசன்

நமது பாவேந்தர்…! நாம் கொண்டாடலாம்…!!

இலக்குமி வயிற்றில் சுமந்த கவிச்செல்வம்…!

கனகசபை தோளில் சுமந்த தமிழ்க்கனல்…!

பூமி புதுவையில் சுமந்த புரட்சிக்கவி…!

சங்கே முழங்கென்று முழங்கிய சங்கத்தமிழன்…!

இசையாய் அமுது ஊட்டிய இசையமுது…!

தமிழுக்கு அமுதென்று பேரென்ற தமிழ்த்தாசன்…!

அன்பு மலர்ந்த அழகின் சிரிப்பு…!

தமிழ்மொழியின் மீதும் பாரதியின் மீதும்…!

அளவற்ற அன்பும் எல்லையற்ற காதலும்…!

பரந்த பாருக்கே பா வேந்தர்…!

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்…!

பாவேந்தர் பாட்டை எடுத்துப் பாடு…!

அதுவே அகிலமாளும் பைந்தமிழர் போர்க்கருவி…!

நாவேந்தும் அவர் பாட்டைக் கேள்…!

நரம்பினிலே தமிழ்க்குருதி தன்னால் ஏறும்…!

பாட்டு என்றவுடனும் பாட்டின் மீது..!

காதல் என்றவுடனும் நினைவில் நிற்பவர்…!

எட்டையபுரம் மண் ஈன்றெடுத்த சுப்பிரமணி…!

பாட்டுக்கொரு புலவன் என் பாரதியே…!

முண்டாசு கவிஞன் பாரதி என்றாலும்…!

பாரதியின் மீது தீராக்காதல் என்றாலும்…!

நமது நினைவலைகளைத் தொட்டுச் செல்பவர்…!

பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசன்…!

மு.கௌதமன்_
திருச்சிராப்பள்ளி.

Share this

3 Comments

  • சிறப்பான தொகுப்பு. அருமையான கவிதைகள். பாரதிதாசன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்!

  • தஞ்சை த.இராமநாதன்

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப்பணி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *