அப்பா நீ தீர்க்கதரிசிதான்

அப்பா வெறுங்காலில்

நடக்கச்சொல்லிக்

கொடுத்தபோது

வெட்டித்தனமாகத்

தெரிந்தது

ஈரத்துணியை

வயிற்றில் கட்டி

பசியடக்கச்சொல்லிக்

கொடுத்தபோது

பைத்தியக்காரத்தனமாகத்

தெரிந்தது

மூட்டைதூக்கி ஓடச்

சொன்னபோது

முட்டாள்தனமாகத்

தெரிந்தது

இறந்தவர்களை

இரக்கமில்லாமல்

புதைத்தபோது

கோபம் வந்தது

நிற்கவைத்து

தண்ணீரைபீய்ச்சி

அடித்தபோது

அவமானமாக இருந்தது

தண்டவாளங்களில்

தங்கவேண்டாம்

என

அறிவுருத்தியபோது

பேடித்தனமாகத்

தெரிந்ததது

உணவுகேட்டு அழுதபோது

தண்ணீரைக் கொடுத்து

சமாதானப்படுத்தியபோது

சாகத்தோன்றியது

தண்ணீரும் கொடுக்காமல்

கொடுத்தபயிற்சி

பயனற்ற தாகத்தோன்றியது

சொந்த ஊருக்குத்

திரும்பும்போது

இவையத்தனையும்

சந்தித்தபோது

அந்தக்கிழவனின்

நினைவு வந்தது

அப்பாநீ தீர்க்கதரிசிதான்

வெளியூர்
வேலைக்கு ச்செல்லும்

பரதேசிக்கான

சாபம் இது

அதை உணர்ந்ததால் தான்

நீ உள்ளூரிலே

விவசாயம் செய்து

மாண்டாலும் கையேந்தி

தெருவில் நிற்கவில்லை

சாகும்போதும்

மானத்துடன் தான்

நாங்களோ குடும்பத்தோடு

சீரழிகிறோம் அகதிகளாய்

அ.முத்துவிஜயன்

Share this
தொடர்புடையவை:  விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *