அலைகடல் அற்புதம்

படைத்தவன் படுப்பது பாற்கடல் என்பார்!
கடலில் மூழ்கி உலகைக் காத்தார்!
வராகக் கடவுள் என்றே சொல்வார்!
வாசுகி மத்தால் கடலைக் கடைந்த
பொருளின் முதலே அமிர்தம் என்பார்!
சமுத்திர நீரை அரசன் ஆக்கி
அற்புத புராணம் அழகாய் சொல்வார்!
புராணப் பெருமை ஆயிரம் உண்டு
கடலைப் போற்றிப் புனைந்த வரிகள்!

கடலும் வானும் சேரும் இடமே
கவிஞர் கொள்ளும் அதிசய உவமை!
கடலைப் போல உயர்வைச் சொல்லும்
காவியம் எல்லாம் தமிழில் அதிகம்!
கடலைப் போல பெரிய மனது
என்றே சொல்வார் நாமும் ஏற்போம்!

காவியக் கண்ணன் ஒன்றாய் இருந்து
கணக்கில் அடங்கா கோபியர் கூட்டம்
காதல் நதியாய் கலந்திடச் செய்தான்!
கடலாய் எங்கும் காட்சி அளித்தான்!
உலகில் உள்ள நதிகள் எல்லாம்
முடிவில் சேரும் இடமும் ஒன்றே!
நதிகள் எல்லாம் கோபியர் என்றால்
கடலின் காட்சி கண்ணன் தானே!

கண்டம் காட்டும் எல்லை எல்லாம்
கடலை வைத்தே முடிவும் செய்வார்!
நீலக் கடலில் நீந்தும் பொருட்கள்!
அற்புத உலகம் அனைத்தும் உண்டு!
அமைதியைச் சொல்வார் ஆழ்கடல் என்று!
அலைகடல் ஓசை அற்புதம் என்பார்!
ஆழிச் சுனாமி அச்சமும் உண்டு!
கடலின் பெருமை சொல்லி மாளா(து)!!!!

சிவசுப்பிரமணியன்_குருமூர்த்தி

மடிப்பாக்கம் சென்னை 600 091
கைபேசி: 93671 08827
மின்னஞ்சல்: gsivasubramanian61@gmail.com

Share this
தொடர்புடையவை:  மரணமில்லாப் பெருவாழ்வு

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *