சாதனையின் இரகசியம்..

இந்த அனுபவம்
கிடைத்து விடுவதில்லை
எவருக்கும் எளிதில்..
அதற்கும் வேண்டும்
தனித் திறமை..

இன்பமும்… துன்பமும்
பாராட்டுகளும்.. புறக்கணிப்பும்..
அங்கீகாரமும்.. அவமானமும்..
வாய்ப்புகளும்..வசைகளும்..
பெருமிதமும்.. பொறாமையும்..
நண்பனும்.. எதிரியும்..
கைதட்டல்களும்.. ஏமாற்றமும்..

அனைத்தும் ஒரே
நேரத்தில் மாற்றி..மாற்றி
விழிகளில் திரையிடும்.. .
கன்னத்தில் வழிந்து
நீர் இரண்டாக பிரியும்..
ஒன்று ஆனந்தக்கண்ணீர்..
மற்றொன்று.. பிறர் இதயத்தில்
ஊற்றிய சுடுநீர்..

இரண்டையும் சமமாக
பாவித்து..
துடைத்தெறிந்து விட்டு
புறப்பட்ட தன்னம்பிக்கையே
சோதனையை சாதனையாக்குகிறது..

எல்லா தோல்விகளிலும்..
முயற்சி அடங்கியிருக்கும்..
எல்லா வெற்றிகளிலும்
முந்தைய தோல்வி ஒளிந்திருக்கும்..

சாரதா சந்தோஷ்
ஐதராபாத்
9640596371

Share this
தொடர்புடையவை:  மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !

5 Comments

 • Raju Arockiasamy

  இரண்டையும் சமமாக
  பாவித்து..
  துடைத்தெறிந்து விட்டு
  புறப்பட்ட தன்னம்பிக்கையே
  சோதனையை சாதனையாக்குகிறது…..

  எத்துனை ஆழமான உண்மை…
  இதைச்செய்தோரே சாதனையாளர்கள்…
  இதோ எங்கள் கண்முன்னே..
  விடிவெள்ளியாக… வழிகாட்டியாக…
  வாழ்க வளமுடன் சகோதரி !

 • ப. கோபாலன்

  சாதனைகளின் இரகசியம் அசாத்திய தன்னம்பிக்கை என்பதை முரண்பட்ட இரட்டை சொற்களின் (oxymorons) வாயிலாக வெளிப்படுத்தும் சிறப்பான கவிதை. இக்கருத்தை சித்தரிக்கும் விதமாக மேலும் கீழும் ஊசலாட உதவும் ஊஞ்சல் பலகை!

  • Saradha Santosh

   அற்புதமான வாழ்த்து.. நன்றி விஞ்ஞானி கோபாலன் சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *