ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு முதல்வர் அறிவிப்பிற்கு வரவேற்பு பிஆர் பாண்டியன்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் முன்கூட்டிய அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சி அளிக்கிறது, நம்பிக்கையோடு சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு வழிவகுத்துள்ளதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து நெல் கொள்முதலை விரிவுபடுத்துவதற்கு மழையால் பாதிக்கப்படக்கூடிய நெல்மணிகளை உலர்த்தக்கூடிய நவீன இயந்திரங்களுடன் உலர் களங்கள்,கிடங்குகள் அமைப்பதற்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம்.

குருவைக்கு தேவையான குறுகிய கால விதைகள் தரமான விதைகளாக கிடைப்பதற்கு வேளாண் துறை முன்வர வேண்டும்.

தனியார் விற்பனை நிலையங்களில் ஒரு மூட்டை டிஏபி 200 முதல் 300 வரை விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள்.கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

கூட்டுறவு கடன் வழங்குவதற்கு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வேளாண் நகைக்கடன்களுக்கு ஈடுடான நகைகளை விவசாயிகளுக்கு திரும் வழங்கிட கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனைத் தங்கள் ஊடகம்,பத்திரிக்கையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.

அன்புடன்,
என் மணிமாறன் செய்தித்தொடர்பாளர்

Share this
தொடர்புடையவை:  கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை கால தாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *