தென்காசி காவல்துறைக்கு 50 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கிய துரை வைகோ


தென்காசி, ஜூன் – 5
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கான பணியாற்றும் காவல்துறையின் பணியை ஊக்குவிக்கும் வகையில் தென்காசி மாவட்ட காவல் துறையினருக்கு மறுமலர்ச்சி தி மு க  சார்பில்
வைகோவின் புதல்வர்
துரை வைகோ
50 ஆயிரம் முகக் கவசங்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம்  வழங்கினார்.

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மதிமுக தென்காசி மாவட்ட செயலாளர் தி.மு. ராஜேந்திரன்,வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், மதிமுக தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், மாணவரணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட பிரதிநிதி இசக்கி, வல்லம் மணி, மாரிச்செல்வம், இலத்தூர் முருகன், குற்றாலம் வேல்ராஜ், இலஞ்சி முருகன், செண்பகம், பொய்கை மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Share this
தொடர்புடையவை:  கொரோனா தடுப்பு பணிகளில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *