பாபநாசம் காரையார் அணையில் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு

கார்பருவ சாகுபடியையொட்டி பாபநாசம் காரையார் அணை மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து இன்று முதல் 15.10.2021 வரை 137 நாட்கள் 1, 400 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு பாபநாசம் கரையார் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார். இதில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும், இதன் மூலம் நெல்லை மற்றும
ம் தூத்துக்குடி மாவட்ட சேர்ந்த சுமார் 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  திருச்செந்தூர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *