இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கைவிரல் ரேகை, EKYC சரி பார்க்க வருமாறு சிலிண்டர் ஏஜென்சிகள் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. பயனாளர்களின் உண்மை தன்மையை அறிய கேஒய்சி புதுப்பிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து அந்த பணியை மேற்கொண்டு வரும் ஏஜென்சிகள் சிலிண்டர் விநியோக ரசீது மூலமாக நினைவுபடுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களிடம் கேஸ் நிறுவனங்கள் பயோமெட்ரிக் பதிவு சரிபார்த்து வரும் நிலையில் அதை மேற்கொள்ளாதோருக்கு சேவை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவுகிறது.
இதனை மறுத்துள்ள பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம், போலிகளை களையவும் பயன்கள் உரியவரை சென்றடையுமே பயோமெட்ரிக் பதிவிடப்படுகிறது. இதை மேற்கொள்ளாதவருக்கு சேவை நிறுத்தப்படாது, வழக்கம் போல கேஸ் விநியோகிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது.