பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கக்கால் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், சீனாவின் நவீனமயமாக்கம், முன்கண்டிராதது.
மனித குலத்தின் வரலாற்றில், இத்தகைய மாபெரும் பாய்ச்சலை மற்ற சமூகத்தில் நான் முன்பு பார்க்க வில்லை. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பின் மன்றக்கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரை, முக்கியமான வாய்ப்பை வழங்கியது.
இவ்வாய்ப்பை பாகிஸ்தான் உறுதியாகப் பற்றிக்கொள்ளும். மேலும் சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டப்பணியின் முதல் கட்டக் கட்டுமானம் நிறைவடைந்தது. அதன் மூலம், பொது மக்கள், அதிக நலன்களைப் பெற்றுள்ளனர்.
இத்திட்டப்பணியின் 2வது கட்டக் கட்டுமானம், பாகிஸ்தான் மக்கள் வாழ்க்கை, வேலை வாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு மேலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு தெரிவித்தார்.