குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து சீரானதால் 9 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
குமரியில் பெய்துவந்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் திற்பரப்பு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து.
இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் மூடப்பட்டதால் அருவியில் நீர்வரத்து சீரானது. இதனால் 9 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.