ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி பாசனம் பெரும் மாவட்ட மக்கள் கொண்டாடும் விதமாக ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு அன்று ஏராளமான பக்தர்கள் மேட்டூரில் திரளுவார்கள். தமிழகத்தில் ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவார்கள் என்பதால் ஜூலை 28 நாளை முதல் ஏழு நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நாள்தோறும் வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி வீதம் அடுத்த ஏழு நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.