வணிக நோக்கிற்கான SQX-1 ஏவூர்தி ஏப்ரல் 7ஆம் நாள் 12 மணிக்கு சீனாவின் ஜியூச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ஏவூர்தியின் ஒட்டுமொத்த திட்டத்தின் கச்சித தன்மையைச் சரிபார்த்து, பறத்தல் தரவுகளைத் திரட்டுவது இத்திட்டப்பணியின் இலக்காகும்.
சுருக்கமாக iSpace என அழைக்கப்படும் Interstellar Glory விண்வெளி தொழில் நுட்ப நிறுவனத்தால் SQX-1 ஏவூர்தி ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது. பெய்ஜிங்கில் அமைந்துள்ள இந்நிறுவனம் தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.