எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை

நவீன எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானத்தை முன்னேற்றுவது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜூலை 30ஆம் நாள் பிற்பகல் 16வது குழு பயிலரங்கை நடத்தியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், நவீன எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானத்தை முன்னேற்றுவது, தேசிய பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கத்தின் உள் கோரிக்கையாகும்.

சீன நவீனமயமாக்கத்தின் மூலம் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்கு பிறகு இதுவரை, எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானத்தை, நாட்டின் ஆட்சிமுறையின் முக்கிய இடத்தில், கட்சி மத்திய கமிட்டி வைத்து வருகின்றது.

சீனாவின் எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானம் வரலாற்று தன்மை வாய்ந்த சாதனைகளைப் பெற்று, புதிய துவக்கப் புள்ளியில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானத்தையும், எல்லை மற்றும் கடல் பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் கூட்டாக முன்னேற்றி, அடிப்படை வசதிகளின் கூட்டுக் கட்டுமானம் மற்றும் பகிர்வை வலுப்படுத்த வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டை வலுப்படுத்தி, எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானத்துக்கான நுண்ணறிவுக் கட்டுப்பாட்டு அமைப்புமுறையை உருவாக்க வேண்டும். தொடர்புடைய நாடுகளுடன் பயனுள்ள ஒத்துழைப்புகளை அதிகரித்து, எல்லை கடல் மற்றும் வான் பாதுகாப்புக்கான கட்டுமானத்துக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author