சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 18ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 28 இலட்சத்து 49 ஆயிரத்து 970 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.5 விழுக்காடு அதிகமாகும். 2022ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் இருந்ததை விட 2.2 விழுக்காடு அதிகமாகும்.
வேளாண்மை உற்பத்தி நிலைமை நிதானமாக இருக்கின்றது. தொழிற்துறை உற்பத்தி படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்புத் துறையும் நிதானமாக இருக்கின்றது. முதலாவது காலாண்டில் வேலையின்மை விகிதம் சராசரியாக 5.5 விழுக்காடாகும். மக்களின் நுகர்வோர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.3 விழுக்காடு அதிகமாகும்.